வெள்ளி, 18 செப்டம்பர், 2009
பிலிப்பைன்சில் 6.1 ரிக்டர் நிலநடுக்கம்
மத்திய பிலிப்பைன்ஸ் பகுதியில் உள்ள மின்டோரோ தீவில் இன்று 6.1 ரிக்டர் அளவுக்கு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.
மதியம் சுமார் 2.23 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் தென் சீன கடல் பகுதியில் கலின்டான் நகரில் இருந்து சுமார் 30 கிமீ தூரத்தில் 50 கிமீ ஆழத்தில் மையமிட்டது.
இது குறித்து பிலிப்பைன்ஸ் புவியியல் ஆராய்ச்சியாளர் இஸ்மாயில் நாரக் கூறுகையில்,
இந்த நிலநடுக்கத்தால் மிகப்பெரும் அலைகள் ஏற்பட்டது. ஆனால், சுனாமி ஏற்படவில்லை. சுமார் 6.5 ரிக்டர் அளவுக்கு மேல் நிலநடுக்கம் ஏற்பட்டால் தான் சுனாமி உருவாகும் என்பதால் அதற்கான எச்சரிக்கையும் விடப்படவில்லை
Labels:
நிலநடுக்கம்,
பிலிப்பைன்ஸ்
0 comments:
கருத்துரையிடுக