வெள்ளி, 18 செப்டம்பர், 2009
குமரி மாவட்டத்தில் வேகமாக பரவும் 'மெட்ராஸ் ஐ'
நமது மாவட்டத்தில் 'மெட்ராஸ் ஐ' நோய் வேகமாக பரவி வருகிறது. மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக விட்டு விட்டு மழை பெய்வதும் பகலில் வெயில் கொளுத்துவதுமாக இருக்கிறது. இந்நிலையில் இந்த மாவட்டம் முழுவதும் மக்கள் 'மெட்ராஸ் ஐ' நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
பொதுவாக இந்த நோய் பாதித்தவர்களுக்கு கண்கள் சிவந்து தடித்து விடும். ஆனால் தற்போது கண் நோயால் பாதிக்கப்படுபவர்களுக்கு கண்கள் சிவப்பது குறைவாக இருந்தாலும் எரிச்சல் அதிகமிருப்பதாக கூறுகின்றனர்.
இந்த நோய்க்கு கல்லூரி, பள்ளி மாணவர்கள் மற்றும் குழந்தைகள் என ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு வீட்டில் ஒருவருக்கு வந்தால் மற்றவர்களுக்கு அடுத்த சில நாட்களிலே அடுத்தவருக்கு பரவி விடுகிறது.
நோயாளிகள் வெளிச்சத்தில் கண்களை திறக்க முடியாத அளவுக்கு கண்கள் கூசி வருவதாக தெரிவிக்கின்றனர். இதனால் அவர்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர்.
இந்த நோய் பாதிப்பு தெரிய வந்தவுடன் மருத்துவரின் தக்க ஆலோசனையின் பேரில் மருந்துகள் எடுத்து கொள்ள வேண்டும். தாமதப்படுத்தினால் நோயை கட்டுப்படுத்த 10 நாட்கள் வரை ஆகும்.
Labels:
குமரி மாவட்டம்
0 comments:
கருத்துரையிடுக