வியாழன், 3 செப்டம்பர், 2009

ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி சென்ற ஹெலிகாப்டர் மாயம் - பரபரப்பு

ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி கர்னூல் என்ற இடத்திலிருந்து சித்தூருக்கு ஹெலிகாப்டரில் சென்றார். இந்த ஹெலிகாப்டர் மோசமான வானிலை காரணமாக திடீரென மாயமானது. இதனையடுத்து ஆந்திராவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இன்று காலை 8.30 மணியளவில் ஆந்திராவிலுள்ள கர்னூல் என்ற இடத்திலிருந்து சித்தூருக்கு ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி, ஹெலிகாப்டர் மூலம் பயணம் செய்தார். அவருடன் ஐ.ஏ.எஸ் அதிகாரி உட்பட பாதுகாப்பு படையினரும், இரண்டு பைலட்டுகளும் சென்றனர். புறப்பட்டு சென்ற சில நிமிடங்களிலேயே ஆந்திராவில் பலத்த மழை பெய்ததது, இதனால் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இந்நிலையில் அவர் சென்ற ஹெலிகாப்டர், தொடர்ந்து 5 மணிநேரம் ரேடார் கட்டுப்பாட்டு அறைக்கு எந்த ஒரு சிக்னலும் கிடைக்காததால், ஹெலிகாப்டர் மாயமானதை அம் மாநில அரசு உறுதி செய்தது. மத்திய உள்துறை அமைச்சகமும் இதனை உறுதி செய்துள்ளது. இந்நிலையில் அவர் நலமுடன் இருப்பதாக அம்மாநில முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

காட்டில் ஹெலிகாப்டர் தரை இறங்கியதாக தகவல் ஐதராபாத்: ஆந்திர முதல்வர் மாயமானதை அடுத்து 7 விமானப்படை விமானங்கள் கடந்த 7 மணிநேரமாக தேடுதல் வேட்டை ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் அவரது ஹெலிகாப்டர் காட்டுப் பகுதியில் தரை இறங்கியிருக்க கூடும் என ஆந்திர மாநில முதல்வர் அலுவலக தகவல்கள் தெரிவித்தன. இந்நிலையில் அப்பகுதி பொதுமக்கள் முதல்வரை தேடும் பணியில் ஈடுபடுமாறு அம் மாநில அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

0 comments:

கருத்துரையிடுக