ஞாயிறு, 6 செப்டம்பர், 2009
குமரியில் விடிய விடிய சாரல் மழை
குமரி மாவட்டம் முழுவதும் விடிய விடிய பெய்து வரும் சாரல் மழையால் குளிர்ச்சி யான காலநிலை நிலவுகிறது.
குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தட்பவெப்பநிலையில் மாற்றம் ஏற்பட்டு மழை பெய்து வருகிறது. மலை யோர பகுதிகள், அணையின் நீர்பிடிப்பு பகுதிகளிலும் மழை காணப்படுகிறது. இதனால் மாவட்டம் முழுவதும் வெப்பத்தின் தாக்கம் கணிசமாக குறைந்துள்ளது. சாரல் மழை மட்டுமே தொடர்ந்து பெய்து வருவதாலும், அணைகளில் இருந்து கணிசமாக நீர் வெளியேற்றப்பட்டு வருவதாலும் அணைகளில் நீர்மட்டம் சரிந்து வருகிறது.
இந்த நிலையில் நேற்றும் மாவட்டம் முழுவதும் சாரல் மழை பெய்தது. தொடர் மழை கார ணமாக திற்பரப்பு அருவி யில் விழும் தண்ணீரின் அளவு அதிகரித்துள்ளது. பழையாறு, வள்ளியாறு, குழித்துறை தாமிரபரணி ஆகியவற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
Labels:
குமரி மாவட்டம்
0 comments:
கருத்துரையிடுக