செவ்வாய், 1 செப்டம்பர், 2009

ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் கறுப்பினத்தவர்கள் மீதான வன்முறைகள் அதிகரிக்கும் அச்சம்

ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் வாழும் ஆபிரிக்க கறுப்பினத்தவர்கள் தம்மீது தாக்குதல்கள் நடத்தப்படலாம் என்ற அச்சத்தில் உள்ளதாக அங்கு நடத்தப்பட்டுள்ள புதிய ஆய்வொன்று தெரிவித்துள்ளது..

மொஸ்கோவில் வெளிநாட்டவர்களின் நலன்களைப் பேணும் அரச சார்பற்ற அமைப்பொன்று, தாம் ஆய்வுக்கு உட்படுத்திய இருநூறு பேரில் அரைவாசிக்கும் அதிகாமானோர் தாக்குதல்களை எதிர்கொண்டதாகக் கூறியுள்ளமையை சுட்டிக்காட்டியுள்ளது.

எண்பது வீதத்திற்கும் அதிகமானோர் தாம் வார்த்தைகளால் துன்புறுத்தப்படுவதாக கூறியுள்ளனர்.

அதிகார பூர்வ புள்ளிவிபரங்களின்படி, மொஸ்கோவில் ஆபிரிக்க கறுப்பினத்தவர்கள் 10 ஆயிரம் பேர் வசிக்கின்றனர்.

இவர்களில் அனேகமானோர் சோவியற் காலத்தில் தொழிலுக்காகவும் கல்விக்காகவும் குடியேறியவர்கள் ஆவர்.

0 comments:

கருத்துரையிடுக