
"அமெரிக்காவிடம் இருந்து வாங்கிய, "ஹார்பூன்' ஏவுகணையின் வடிவமைப்பை சட்ட விரோதமாக மாற்றி அமைக்கவில்லை' என, பாகிஸ்தான் மறுப்பு தெரிவித்துள்ளது. இதை, இந்தியாவிற்கு எதிராக பயன்படுத்தும் திட்டம் இருப்பதாக வந்த தகவலையும் மறுத்திருக்கிறது.அமெரிக்காவில் தயாரான, "ஹார்பூன்' வகை ஏவுகணைகளை பாகிஸ்தான் வாங்கியுள்ளது.
இந்த ஏவுகணைகள், கப்பல்களை தாக்குவதற்காக கடற்படை பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டவை.ஆனால், பாகிஸ்தான், இந்த ஏவுகணையின் வடிவமைப்பை தரையிலிருந்து, தரையில் உள்ள இலக்கை தாக்கும் வகையில் தொழில்நுட்ப மாற்றம் செய்துள்ளதாகவும், இவை இந்தியாவில் உள்ள இலக்கை தாக்கும் வகையில் குறிபார்த்து நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அமெரிக்கா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.இந்த விவகாரம் சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்திய கடற்படை தளபதி சுரேஷ் மேத்தாவும் இந்த விஷயத்தில் தனது கவலையை தெரிவித்திருந்தார்.இந்த குற்றச்சாட்டை பாகிஸ்தான் மறுத்துள்ளது.
0 comments:
கருத்துரையிடுக