சனி, 5 செப்டம்பர், 2009

இஸ்ரேலில் பாலஸ்தீனிய பெண்களிடம் நிர்வாண சோதனை

ஆக்கிரமிக்கப்பட்ட ஜெருசலேம்,அராபிய சிறுபான்மை உரிமை சட்ட மையம் (Legal centre for Arab Minority rights in Israel) இஸ்ரேலிய சிறை அதிகாரிகள் மற்றும் Ofer சிறைக்கு எழுதிய கடிதத்தில் பெண் பார்வையாளர்களை நிர்வாண சோதனையில் ஈடுபடுத்துவதை நிறுத்துமாறு கேட்டுக்கொண்டுக்ள்ளது.இஸ்ரேலின் சிறைகளில் அநியாயமாக அடைக்கபட்டுள்ள தங்களது உறவினர்களை பார்வையிடச்செல்லும் பெண் பார்வையாளர்களை நிர்வாணப்படுத்தி சோதனையிடும் பழக்கத்தை கொண்டுள்ளது. பார்வையாளர்கள் இதுக்கு மறுப்பு தெரிவித்தால் அவர் தங்கள் உறவினர்களை பார்வையிட அனுமதி மறுக்கப் படுகின்றது.

இரண்டு பெண் பார்வையாளர்கள் இதனைப்பற்றி கூறுகையில், நாங்கள் சிறையிலிருக்கும் எங்கள் உறவினர்களை பார்க்கச்செல்லும் போது வழக்கமான சோதனைக்குப்பின் எங்களை ஒரு அறைக்குள் அனுப்பினார்கள். அதில் ஒரு கண்ணாடி ஜன்னல் இருந்தது. அதன் மறுபுறம் யார் இருக்கின்றார்கள் என்பது எங்களுக்கு தெரியவில்லை. பின்பு அந்த அறையில் உள்ள ஒலிப்பெருக்கியில் எங்கள் ஆடைகளை களையுமாறு ஒரு பெண்ணின் குரல் சொன்னது. அதற்கு நாங்கள் மறுப்பு தெரிவித்ததால் நாங்கள் எங்கள் உறவினர்களை பார்க்க அனுமதி மறுக்கப்பட்டோம். அதனால் நாங்கள் எங்கள் உறவினர்களை பார்க்காமல் திரும்பும் நிலை ஏற்ப்பட்டது.இது போன்ற நிகழ்வுகள் ஒன்றும் புதிதில்லை என்றும், இது போன்ற நிகழ்வுகள் பல முறை நடந்திருக்கிறது என்றும், கிழக்கு ஜெருசலேம், மேற்குக் கரை பகுதியில் உள்ள பெண்களும் இது போன்று இழிவு படுத்தப் படுகின்றார்கள் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.இஸ்ரேல் இதனை மறுத்துள்ள போதிலும், ஒரு சில நேரங்களில் இது போன்ற சோதனைகளில் நாங்கள் ஈடுபடுவோம் என்று கூறியுள்ளது.

0 comments:

கருத்துரையிடுக