புதன், 23 செப்டம்பர், 2009
அழிவுப் பாதையில் பாஜக
அத்வானி ஊசிப் போன ஊறுகாய்-பாரிக்கர்
ஊறுகாயை சில நாட்கள் தான் பயன்படுத்த முடியும். அதை தொடர்ந்து வைத்திருந்தால் கெட்டுவிடும். அது போல அத்வானியும் ஊசிப் போன ஊறுகாய் போல ஆகி விட்டார். அவரது அரசியல் வாழ்க்கை கிட்டதட்ட முடிந்துவிட்டது என பாஜக மூத்த தலைவர் மனோகர் பாரிக்கர் தெரிவித்துள்ளார்.
கோவா மாநிலத்தின் முன்னாள் முதல்வரான மனோகர் பாரிகர் வரும் டிசம்பரில் ராஜ்நாத் சிங்கின் பதவி காலம் முடிந்தவுடன் அடுத்த பாஜக தலைவராக திட்டமிட்டு காய் நகர்த்தி வருகிறார். ஆர்எஸ்எஸ் ஆதரவைப் பெற்ற இவர் பனாஜியில் நிருபர்களிடம் பேசுகையில்,
அத்வானி இன்னும் ஒரிரு ஆண்டுகள் தான் அரசியலில் இருப்பார். வயதான காரணத்தால் அவரது அரசியல் வாழக்கை நீண்டநாள் ஆன ஊறுகாய் போல் ஊசிப் போய் விட்டது என்றார் .
Labels:
அழிவுப் பாதையில் பாஜக
0 comments:
கருத்துரையிடுக