புதன், 23 செப்டம்பர், 2009
வக்பு வாரிய நில ஆக்கிரமிப்பு அகற்ற ஸ்டாலின் உத்தரவு
வக்புகளுக்குச் சொந்தமான சொத்துக்களில் இருந்து வரும் வாடகையை சந்தை மதிப்புக்கேற்ப உயர்த்தி, வருமானங்களை அதிகரிக்க வேண்டுமென, அதிகாரிகளுக்கு துணை முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். சிறுபான்மையினர் நலத் துறை, வக்பு வாரியம், மாநில ஹஜ் குழு, சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம், சிறுபான்மையின ஆணையர் அலுவலகம் ஆகியவற்றின் மூலம் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களின் முன்னேற்றம், உலமாக்கள் மற்றும் பணியாளர் நல வாரியத்தின் செயல்பாடுகள் ஆகியவை குறித்து ஸ்டாலின் நேற்று ஆய்வு செய்தார்.
இக் கூட்டத்தில் ஸ்டாலின் பேசியதாவது: வக்புகளுக்குச் சொந்தமான நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியை மாவட்ட கலெக்டர்கள் மூலம் துரிதப்படுத்த வேண்டும். இந்த சொத்துக்கள் தொடர்பான வழக்குகளை துரிதமாக முடித்து வக்பு சொத்துக்களை மீட்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இலவச சட்ட உதவி வழங்கி மண விலக்கு பெறும் முஸ்லீம் பெண்களுக்கு சட்டரீதியாக ஜீவானம்சம் வழங்கத் தேவையான பணிகளை மேற்கொள்ளலாம். ஹஜ் புனித பயணிகளுக்கான ஒதுக்கீட்டை அதிகரிக்க, மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும்.
முஸ்லிம்களுக்கான பழுதடைந்த பள்ளிவாசல்களை பழுதுபார்க்கும் பணி மற்றும் அடக்கஸ்தலங்களை பாதுகாக்க சுற்றுச்சுவர் கட்டும் பணிகளை குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள் மேற்கொள்ள, தனியாகத் திட்டம் தயாரிக்க வேண்டும். இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்தார்.
Labels:
வக்ஃபு வாரியம்
0 comments:
கருத்துரையிடுக