வியாழன், 17 செப்டம்பர், 2009
மியான்மரில் தொடர் குண்டுவெடிப்பு
மியான்மரின் மிகப்பெரிய நகராக கருதப்படும் யாங்கானில் இன்று அடுத்தடுத்து 7 இடங்களில் தொடர் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது.
யாங்கான் நகரத்தின் வடக்குப் பகுதியில் உள்ள தர்யார் என்ற தொழிற்பேட்டை பகுதியில், இன்று அதிகாலை அடுத்தடுத்து ஐந்து குண்டு வெடிப்புகள் நிகழ்ந்தன.
இதனைத் தொடர்ந்து மற்றொரு தொழிற்பேட்டை பகுதியில் காலை 10 மணியளவில் அடுத்தடுத்து இரண்டு குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தன.
இந்த குண்டுவெடிப்பினால் உடமைகளுக்கு இலேசாக சேதம் ஏற்பட்டபோதிலும், யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை.
இந்த குண்டுவெடிப்புக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை.காவல் துறையினர் இது குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
Labels:
குண்டு வெடிப்பு,
மியான்மர்
0 comments:
கருத்துரையிடுக