புதன், 2 செப்டம்பர், 2009

உலகப் பொருளாதாரம் சகஜ நிலைக்குத் திரும்புகிறது- மன்மோகன் சிங்.

உலகப் பொருளாதாரம் மெதுவாக சகஜ நிலைக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறது என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.

டெல்லி யில், இன்று திட்டக் கமிஷன் கூட்டம் நடந்தது. இதற்கு திட்டக் கமிஷனின் தலைவராகவும் இருக்கும் பிரதமர் மன்மோகன் சிங் தலைமை ஏற்றார்.

கூட்டத்தில் அவர் தொடக்க உரையாற்றியபோது, இந்தியப் பொருளாதாரத்தையும் பாதிப்புக்குள்ளாக்கிய உலகப் பொருளாதார நிலை முடிவுக்கு வந்து கொண்டிருக்கிறது. உலகப் பொருளாதார நிலை மெதுவாக சகஜ நிலைக்குத் திரும்பத் தொடங்கியுள்ளது.

கடந்த ஆண்டு நமக்கு மிகவும் கடினமான ஆண்டாக அமைந்தது. காரணம், உலகப் பொருளாதார மந்த நிலையே. ஆனால் அது தற்போது முடிவுக்கு வரத் தொடங்கியுள்ளது. பொருளாதார நிலை உலக அளவில் மெதுவாக இயல்பு நிலைக்குத் திரும்பத் தொடங்கியுள்ளது.

தற்போது பருவ மழையும் பொய்த்துப் போயுள்ளது. இந்த சூழ்நிலையில், ஒட்டுமொத்த பொருளாதார நிலைமை குறித்தும் திட்டக் கமிஷன் உறுப்பினர்கள் விவாதித்தால் நலமாக இருக்கும் என்றார் பிரதமர்

0 comments:

கருத்துரையிடுக