ஞாயிறு, 6 செப்டம்பர், 2009
சிவசேனா தலைவர் பால் தாக்கரேவை கைது செய்ய வாரன்ட்
சிவசேனா தலைவர் பால் தாக்கரேவுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத கைது வாரன்டை பீகார் நீதிமன்றம் பிறப்பித்து உள்ளது.
சிவசேனா தலைவர் பால் தாக்கரே தனது கட்சியின் அதிகாரபூர்வ ஏடான சாம்னாவில் பீகார் மக்களுக்கு ஆத்திரமூட்டும் வகையில் அவர்களை தரக்குறைவாக விமர்சித்து எழுதி இருந்தார். அதையட்டி பால் தாக்கரே மீது நடவடிக்கை எடுக்க கோரி, ராஜேஷ் குமார் சிங் என்ற வக்கீல், பீகார் மாநிலம் போஜ்பூரில் உள்ள சப்-டிவிஷனல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ராஜேஷ்பதி திவாரி, பால் தாக்கரே கடந்த ஜூலை 7ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வாரன்டு பிறப்பித்தார். ஆனால், அந்த தேதியில் பால் தாக்கரேயோ, அவரது சார்பில் வக்கீலோ ஆஜர் ஆகவில்லை. அந்த வழக்கு நேற்று முன்தினம் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போதும் பால் தாக்கரே ஆஜராக வில்லை.
அதைத் தொடர்ந்து பால் தாக்கரேயை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த, ஜாமீனில் வெளிவர முடியாத வாரன்டை நீதிபதி திவாரி பிறப்பித்தார்.
0 comments:
கருத்துரையிடுக