திங்கள், 21 செப்டம்பர், 2009

கருப்புப் பண கணக்கில் இந்தியாவுக்கே முதல் இடம்.


கருப்புப்பணத்தைப் பற்றி அரசியல்வாதிகள் பேச ஆரம்பித்து விட்டார்கள். காரணம் உண்மைகள் வெளிச்சத்துக்கு வர ஆரம்பித்து விட்டன. வெள்ளைச் சட்டைக்காரர்கள் பேசுவது கருப்புப்பணத்தை.
யார் பணம்.


எவ்வளவு பணம் தெரியுமா ?
70,00,000 கோடி ரூபாய்கள்.


180 நாடுகளில் இந்தியாவில் இருந்து கருப்புப்பணமாக சென்றத்தொகையே 70 இலட்ச கோடி ரூபாய்கள்.
இந்த 70,00,000 கோடி ரூபாய்கள் உலக கருப்புப்பண கணக்கில் இந்தியாவுக்கு முதல் இடத்தை பெற்றுத்தந்துள்ளது?



  • முதல் இடத்தில் இந்தியா : 1450 பில்லியன் டாலர்கள்.
  • இரண்டாவது இடம் ரஷ்யா: 470 பில்லியன் டாலர்கள்.
  • மூன்றாவது இடம் இங்கிலாந்து : 390 பில்லியன் டாலர்கள்.



ஜெர்மன் அரசின் அதிகார பூர்வ கடிதத்தை அடிப்படையாகக் கொண்டு 22.5.2008ல் டைம்ஸ் அப் இந்தியா போன்ற நாளிதழ்களில் இச்செய்திகள் வெளியானது.


கருப்புப்பண வித்தியாசத்தை பாருங்கள் இந்தியாவை யாருமே விஞ்சமுடியாது.
இப்பணத்தை வெளிகொண்டு வரப்போவதாக ஆளும் காங்கிரஸ் முழக்கமிட்டுக் கொண்டு வருகிறது. எதிர்த்து யார் தெரியுமா தொடையை தட்டுவது பாரதீய ஜனதா கட்சி.


இந்திய நாட்டுக்கு பெயர் ஏழை நாடு, வளரும் நாடு....


யார் வளர்ந்து இருக்கிறார்கள் பெரும் முதலாளிகள் அரசியல்வாதிகள்.. இவர்களுக்கு இதில் பெரும் பங்கு உண்டு.
கட்சிகளுக்கு வித்தியாசமில்லை.
காந்தி வாழ்க என்று கூறியவர்கள்
பாரத மாதாவை போற்றியவர்களே மூவர்ண கொடியிலே இப்பணத்தை மூட்டை மூட்டையாக கட்டிக்கொண்டு சுவிஸ் வங்கியில் போட்டு இருக்கிறார்கள்.


இந்தியனாக இரு.... இந்திய பணத்தையே கொள்ளையிடு...
70 இலட்ச கோடி ரூபாய்கள் உழைத்து சம்பாதித்ததா?


உழைப்பு உயர்வு தரும் என்ற பொன்மொழி 60 விழுக்காடு உள்ள வறுமைக் கொட்டுக்கு கீழே உள்ளவர்களுக்குத்தான்.


விடுதலை நாளன்று சொல்லப்படும் இந்திய ஜனநாயக வலிமையை பேசிக்கொண்டே இருப்போம். சிவிஸ் வங்கி பிதுங்கி வெளியே வரப்போகிறது.
இந்தியாவுக்கு உள்ள வெளிநாட்டுக்கடனை இக் கருப்புப்பணத்தைக் கொண்டு 13 முறை கடனை அடைக்கலாம்.
யாரிடமும் வரியை வசூலிக்காமல் ரூபாய் 1 இலட்சம் வீதம் 45 கோடி வறுமையில் வாடும் குடும்பங்களுக்கு வழங்கலாம்.
தேசிய பற்றோடு கட்சிகள் அரசியல்வாதிகள் முழக்கமிடுகிறார்கள்.
கருப்புப்பணத்தை கொண்டு வந்தே தீருவோம் என்று.  நம்புவோம். 

0 comments:

கருத்துரையிடுக