செவ்வாய், 22 செப்டம்பர், 2009

ஓசன்சாட்-2 - பி.எஸ்.எல்.வி. மூலம் நாளை ஏவப்படுகிறது


இந்தியாவின் கடல் ஆய்வு செயற்கைக் கோளான ஓசன்சாட்-2 நாளை பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்படவுள்ளது.கடலில் மீன்வளத்தைக் கண்டறிவது, வானிலை முன்னறிவிப்பு உள்ளிட்டவை தொடர்பான பணிகளுக்காக இந்த செயற்கைக் கோள் செலுத்தப்படுகிறது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஏவுதளத்திலிருந்து பி.எஸ்.எல்.வி ராக்கெட் மூலம் நாளை ஓசன்சாட்-2 விண்ணில் செலுத்தப்படவுள்ளது.970 கிலோ எடையுடன் கூடிய ஓசன்சாட் செயற்கைக் கோளுடன், ஆறு சிறிய ரக செயற்கைக் கோள்களையும் விண்ணில் செலுத்தவுள்ளது பிஎஸ்எல்வி.இந்த ஆறு சிறிய செயற்கைக் கோள்களில் நான்கு ஜெர்மனியைச் சேர்ந்தவை.
மற்ற இரண்டில் ஒன்று சுவிட்சர்லாந்து மற்றும் இன்னொன்று துருக்கியைச் சேர்ந்ததாகும்.பிஎஸ்எல்வியை செலுத்துவதற்கான இறுதிக்கட்ட கவுண்ட்டவுன் நேற்று காலை 9 மணிக்கு தொடங்கியது. தற்போது அது இயல்பான நிலையில் இருப்பதாக இஸ்ரோ செய்தித் தொடர்பாளர் எஸ்.சதீஷ் தெரிவித்தார்.பி.எஸ்.எல்.வி மூலம் இதுவரை 15 முறை செயற்கைக் கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளன.


நாளை செலுத்தப்படவுள்ளது பி.எஸ்.எல்.வி- சி14 ரகமாகும்.நாளை முற்பகல் 11 மணிக்கு பி.எஸ்.எல்.வி. செலுத்தப்படவுள்ளது.துணை குடியரசுத் தலைவர் பார்க்கிறார்...பி.எஸ்.எல்.ஏ. ஏவப்படுவதை துணை குடியரசுத் தலைவர் ஹமீத் அன்சாரி நாளை நேரில் பார்வையிடுகிறார். இதற்காக இன்று மாலை 4.50 மணிக்கு அவர் சென்னை வருகிறார். பின்னர் ஹெலிகாப்டர் மூலம் அவர் ஸ்ரீஹரிகோட்டா செல்கிறார்.நாளை மறுநாள் அங்கிருந்து புறப்பட்டு 4.40 மணிக்கு சென்னை விமான நிலையம் வருகிறார். பின்னர் அங்கிருந்து 4.50 மணிக்கு டெல்லி புறப்பட்டு செல்கிறார்.

0 comments:

கருத்துரையிடுக