வியாழன், 10 செப்டம்பர், 2009

நெல்லை அண்ணா பல்கலை. சார்பில் நாகர்கோவிலில் அரசு இன்ஜி. கல்லூரி


குமரி மாவட் டத்தில் நாகர்கோவில் கோணம் அரசு பாலி டெக்னிக் வளாகத்தில் உள்ள ஜூனியர் டெக்னிக் கல் ஸ்கூல் கட்டடத்தில் புதிய பொறியியல் கல்லூரி திறந்து செயல்படுத்த நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டது. பொறியியல் கல்லூரிக் கான மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் மூலம் 240 மாணவ மாணவியர் இக்கல்லூரிக்கு தேர்வு செய்யப்பட்டனர். பழைய வகுப்பறை கட்டடங்கள், மாணவ மாணவியரின் வகுப்பறைக்கு தகுந்தவாறு மாற்றங்கள் செய்யப்பட்டு வண்ணம் பூசப்பட்டு புது பொலிவு பெற்றது. இதனை தொடர்ந்து திருநெல்வேலி அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் ‘பல்கலைக்கழக பொறி யியல் கல்லூரி’ துவக்க விழா நாகர்கோவில் கோணம் அரசு பாலி டெக்னிக் வளாகத்தில் இன்று நடந்தது. திருநெல்வேலி அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் காளியப் பன் தலைமை வகித்தார். தமிழக உயர்கல்வி துறை அமைச்சரும், 

திருநெல் வேலி அண்ணா பல்கலைக்கழக இணை வேந்தருமான க. பொன் முடி கல்லூரியை துவக்கி வைத்து பேசினார். அமைச்சர் சுரேஷ்ராஜன் விழாவில் கலந்துகொண்டு பேசி னார். குமரி மாவட்ட கலெக்டர் ராஜேந்திர ரத்னூ, ஹெலன் டேவிட்சன் எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் ராஜன், ரெஜினால்டு, லீமாரோஸ், மாவட்ட வேளாண் விற்பனை குழு தலைவர் ஜி.எம்.ஷா, மாநில மீனவர் நலவாரிய துணைத் தலைவர் இரா.பெர்னார்டு உள்ளிட்டோர் கலந்துகொண்டு பேசினர். பொறியியல் கல்லூரிக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடத் தில் புதிய கட்டடம் கட்டப்படும் வரை இந்த தற்காலிக கட்டடத்தில் கல்லூரி செயல்பட துவங்கும். நாகர்கோவிலில் அரசு சார்பில் பொறியியல் கல்லூரி துவக்கப் பட்டுள்ள நிலையில் குமரி மாவட்ட மக்களின் 25 ஆண்டு கால கனவு இதன் மூலம் நிறைவேறி யுள்ளது

0 comments:

கருத்துரையிடுக