வியாழன், 10 செப்டம்பர், 2009

‘‘இக்னோ’’ பல்கலைக்கழகம் புதிய பாட கல்வி அறிமுகம்

இந்திய அரசின் ‘‘இக்னோ’’ பல்கலைக்கழகம் புதியதாக "CERTIFICATE COURSE IN ENTREPRENEURSHIP" என்ற ஆறுமாத தொலை நிலைக் கல்வியை அறிமுகப்படுத்தியுள்ளது. பிளஸ் 2 வகுப்பில் தேர்ச்சி பெற்ற வர்களும், கல்லூரி மாண வர்களும், பணிபுரிகிறவர் களும், பணிகளில் சேர விரும்புகிறவர்களும், சுய மாக தொழில் ஆரம்பித்து தொழில் அதிபர்களாக மாற விரும்புகிறவர்களுக் கும் இந்த கல்வி மிகவும் உதவிகரமாக உள்ளது.

ஐந்து சிறப்பு பாடங்களைக் கொண்ட இக்கல்வியின் குறைக்கப்பட்ட மொத்த கல்வி கட்டணம் ரூ.1000 . பாடப்புத்தகங் கள் மற்றும் சிறப்பான கல்விகளை இக்கல்வி மையம் இலவசமாக வழங்குகிறது. இந்த கல்வியில் பெறும் சான்றிதழை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து அரசு வேலைகளையும் பெற  வாய்ப்புகள் உள்ளன. 35 சதவீதம் மானியத்துடன் வங்கிக்கடன் பெற்று தொழில் துவங்க இக்கல்வி சான்று மிகவும் உதவியாக உள்ளது.

இக்கல்வியில் சேரும் அனைத்து தாழ்த்தப்பட்ட மற்றும் மலைஜாதி மாணவர்கள் முழுக்கல்வி சலு கையை பெறலாம். IGNOU பல்கலைக்கழகம் இந்த கல்வியை நாகர்கோவில் அண்ணா பேரூந்து நிலையத்திற்கு எதிர்புறம் அமைந்துள்ள இந்தியன் வங்கியின் மாடியில் செயல்படும் இப்பல்கலைக்கழக கல்விமையம் நடத்த உரிமம் வழங்கப்பட்டுள்ளது. (செல்போன் எண்: 9345041515).

விண்ணப்பம் மற்றும் அனைத்து விவரங்களையும் மேற்கூறிய கல்வி மையத்திலிருந்து பெற்றுக் கொள்ளலாம். இத்தகவல் களை ஒருங்கிணைப்பா ளர் ரத்தினம் தெரிவித்தார்.

0 comments:

கருத்துரையிடுக