வியாழன், 17 செப்டம்பர், 2009
இந்த ஆண்டு உலகில் ஒரு பில்லியன் பேர் பட்டினியை சந்திப்பார்கள் : ஐ.நா.
இந்த ஆண்டு உலகில் சுமார் ஒரு பில்லியன் பேர் பட்டினியை சந்திப்பார்கள் என்று ஐ.நா.வின் உலக உணவு திட்டம் ( UN world Food Program - WFP ) தெரிவித்துள்ளது.
கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு உலகம் முழுவதும் பட்டினியை சந்திக்கும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
2009 ஆம் ஆண்டுக்கான உலக உணவு திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ள பட்ஜெட் 6.7 பில்லியன் டாலர் என்றும், ஆனால் இதுவரை 2.6 பில்லியன் டாலர் தொகை கிடைப்பது மட்டுமே உறுதிபடுத்தப்பட்டுள்ளதாகவும் அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
கருத்துரையிடுக