புதன், 23 செப்டம்பர், 2009
டாமிப்ளு மாத்திரை விற்பனைக்கு வந்தது
இன்று முதல் குறிப்பிட்ட பார்மசிகளில் பன்றிக்காய்ச்சலுக்கான டாமிப்ளு மாத்திரை விற்பனைக்கு வந்தது. உலகை அச்சுறுத்தி வரும் பன்றிக் காய்ச்சலுக்கு இந்தியாவில் மட்டும் 200க்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர். இரண்டாயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நோய் அறிகுறி உள்ளவர்களுக்கு டாமிப்ளு எனப்படும் ஆசல்டமிவீர் பாஸ்பேட் மாத்திரைகள் கொடுக்கப்படுகின்றன. இது நாள் வரை அரசு மருத்துவமனைகளில் மட்டுமே இந்த மாத்திரை கிடைத்து வந்தது. வெளிச்சந்தையில் இந்த மாத்திரையை விற்பனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்ததை தொடர்ந்து டாமிப்ளு மாத்திரையை வெளிசந்தையில் விற்பனை செய்ய மத்திய சுகாதார அமைச்சகம் கடந்த 14ம் தேதி ஒப்புதல் அளித்தது. இந்த உத்தரவு இன்று முதல் அமலுக்கு வருகிறது. இதன்படி குறிப்பிட்ட பார்மசிகளில் டாமிப்ளு மாத்திரை மருத்துவர்களின் பரிந்துரையின் பேரில் விற்பனைக்கு கிடைக்கும்.
Labels:
பன்றிக் காய்ச்சல்
0 comments:
கருத்துரையிடுக