திங்கள், 26 அக்டோபர், 2009
தமிழகத்தில் 10 ஆண்டுகளில் 60 ஆயிரம் லஞ்ச புகார்கள் 456 பேருக்கு தண்டனை 100க்கும் அதிகமாக சிக்கிய விஏஓக்கள்
தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அதிகாரிகள் மீது லஞ்ச புகார்கள் வந்ததில், 2 ஆயிரத்து 400க்கும் மேற்பட்ட மனுக்கள் ஏற்கப்பட்டு விசாரணை நடத்தி 456 பேர் தண்டனை பெற்றுள்ள னர். இவர்களில் பெரும் பாலானோர் வி.ஏ.ஓ.,க்கள் என்பது குறிப்பிடத் தக்கது.தமிழகத்தில் டிஜிபி போலோநாத் தலைமை யில் 3 எஸ்.பிக்கள் மேற் பார்வையில் 41 பிரிவுகள் மூலம் 24 டிஎஸ்பிக்கள் தலைமையில் மாநிலம் முழுவதும் லஞ்ச ஒழிப்பு பிரிவு இயங்கி வருகிறது. லஞ்சம் வாங்குவதும், கொடுப்பதும் குற்றம். லஞ்சம் வாங்குபவர்கள் குறித்து புகார் தெரிவிக் கலாம் என்று அரசுதுறை அலுவலகங்களில் விழிப்புணர்வு வாசகங்கள் அதிகாரிகளின் செல் நம்பருடன் எழுதி வைக்கப்பட்டுள்ளது.இதன் பயனாக மாநிலம் முழுவதும் பொதுமக்களிடம் இருந்து வரும் புகாரின் அடிப்படை யில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் வரு வாய்துறை, பத்திரப்பதிவு துறை, வட்டார போக்கு வரத்து கழக அலுவலகங் கள், உள்ளாட்சித்துறை, கல்வித்துறை, காவல்துறை, குடிநீர் வழங்கல் துறை, சுகாதாரதுறை, வனத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை களில் லஞ்சம் பெற்றதாக வந்த புகாரின் அடிப் படையில் விசாரணை மேற்கொண்டனர். கடந்த 10 ஆண்டுகளில் 60 ஆயிரத்து 491 புகார்கள் வந்துள்ளது.இதில் 2 ஆயிரத்து 494 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டு விசா ரணை நடத்தப் பட்டது. விசாரணை நடத்தியதில் மாநிலம் முழுவதும் 456 பேர் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு மாவட்ட குற்றவியல் நீதிமன்றங்கள் மூலம் குறைந்தபட்சம் 6 மாதம் முதல் அதிகபட்சம் 4 ஆண்டுகள் வரை சம்பந்தப்பட்டவர்களுக்கு தண்டனை வழங்கப்பட் டுள்ளது தெரியவந் துள் ளது.
தண்டனை பெற்ற வர்களில் 100க்கும் மேற் பட்டோர் கிராம நிர்வாக அலுவலர்கள் என்பது குறிப்பிடத் தக்கது.கடந்த 2008-09ம் ஆண்டில் 7 ஆயிரத்து 322 புகார் வந்த நிலையில், 250 மனுக்கள் விசா ரணைக்கு எடுத்துக் கொள்ளப் பட்டது. இதில் 40 பேர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டு தண் டனை வழங்கப் பட்டுள் ளது. இந்த 40 பேரில் 12 பேர் கிராம நிர்வாக அலுவலர்கள், ஒரு சார் பதிவாளர், ஒரு சப்-இன்ஸ்பெக்டர், ஒரு மாவட்ட தொழில் மைய திட்ட மேலாளர், ஒரு டாஸ்மாக் மாவட்ட மேலாளர், ஒரு துணை தாசில்தார், ஒரு வருவாய் ஆய்வாளர், ஒரு வனவர், ஒரு வனக்காப்பாளர், ஒரு கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலர், ஒரு சர்வேயர், ஒரு மின்வாரிய உதவி பொறியாளர் உள்ளிட்டோர் அடங் குவர்.
0 comments:
கருத்துரையிடுக