புதன், 7 அக்டோபர், 2009

2010 ஏப்ரல் 1ம் தேதி நடைமுறை பொருள் மற்றும் சேவை வரி அமல்படுத்த நடவடிக்கை மாநிலங்களுக்கு பிரதமர் வலியுறுத்தல்

நாடு முழுவதும் பொருட்கள் மற்றும் சேவை வரி அமலாவதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்த மாநில அரசுகளை பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்தி உள்ளார்.
பொருட்கள் மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அடுத்த ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளது. மறைமுக வரியான இது அமலுக்கு வந்ததும் இப்போது நடைமுறையில் உள்ள மத்திய அரசின் கலால் வரி, சேவை வரி, வாட் மற்றும் மாநில அரசுகளின் உள்ளூர் வரிகள் ஆகியவை உட்பட பல மறைமுக வரிகள் இருக்காது.
இது குறித்து டெல்லியில் நடந்த மாநில உணவு அமைச்சர்களின் மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் கூறியதாவது:
புதிய வரி முறையை அமல்படுத்துவதற்கான காலக்கெடு நெருங்கி வருகிறது. அதற்கான நடைமுறைகளை மாநில அரசுகள் துரிதப்படுத்த வேண்டும். உணவுப் பொருட்களை வகைப்படுத்துதல், வரி விதித்தலில் வித்தியாசத்தை மாநிலங்கள் நீக்க வேண்டும்.
உணவு பதப்படுத்தும் துறைக்கு எளிமையான வரி முறையை ஏற்படுத்த வேண்டியது அவசியம் என்றார்.

0 comments:

கருத்துரையிடுக