புதன், 7 அக்டோபர், 2009
ஆப்கானில் படை குறைப்பு இல்லை : ஒபாமா
ஆப்கானிஸ்தானில் தாலிபான்களுக்கு எதிராக போரிட்டு வரும் அமெரிக்க படையினரின் எண்ணிக்கை குறைக்கப்படமாட்டாது என்று அதிபர் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.
அமெரிக்க நாடாளுமன்றம் மற்றும் செனட் சபை உறுப்பினர்களுடனான சந்திப்பின்போது ஒபாமா இந்த கருத்தை வெளியிட்டதாக அந்நாட்டின் பல்வேறு உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆப்கான் விடயத்தில் இராணுவ தளபதிகள் கூறும் கருத்துக்களை பின்பற்றுமாறு குடியரசு கட்சியினர் ஒபாமாவை வலியுறுத்தி வருகிற நிலையில்,ஜனநாயக கட்சியினரோ இராணுவத்தினரின் கருத்துக்களை பின்பற்றுவதில் அவசரம் காட்டக்கூடாது என்கின்றனர்.
கடந்த 2001 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் தேதி ஆப்கானில் தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்க படையினர் தொடங்கிய போர் எட்டு ஆண்டுகளாக நீடித்து வருகிற நிலையில்,இதுவரை ஏறக்குறைய 800 அமெரிக்க படையினர் உயிரிழந்துள்ளனர்.
இதனால் மிகவும் கவலையடைந்துள்ள ஒபாமா,மேற்கொண்டு இந்த போரை எப்படி கொண்டு செல்வது என்பது குறித்து ஆய்வு செய்து வருவதாக கூறப்படுகிறது.
Labels:
ஆப்கான்;ஒபாமா
0 comments:
கருத்துரையிடுக