ஞாயிறு, 25 அக்டோபர், 2009
அமெரிக்கா-மேலும் 4 வங்கிகள் மூடல்!
வாஷிங்டன்: நிதி நெருக்கடியால் மூடப்பட்ட வங்கிகளின் எண்ணிக்கை நேற்று 100த் தாண்டிவிட்டது. வெள்ளிக் கிழமை மட்டும் நான்கு வங்கிகள் மூடப்பட்டதால், இதுவரை 103 வங்கிகள் தோல்வியைத் தழுவியுள்ளன. ஃப்ளோரிடாவில் இயங்கிய பார்ட்னர்ஸ் வங்கி, ஹில்க்ரெஸ்ட் வங்கி,ஃப்ளாக்ஷிப் நேஷனல் வங்கி, ஜார்ஜியாவில் இயங்கிய அமெரிக்க யுனைட்டட் வங்கி ஆகிய இந்த நான்கு வங்கிகளும் மூடப்பட்டதால் 176.8 மில்லியன் டாலர் அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்க வரலாற்றில் இரண்டாவது முறையாக இந்த அளவு மோசமான நிதி நெருக்கடி தோன்றியுள்ளது. ஏற்கெனவே 1989-ல் 534 வங்கிகள் மூடப்பட்டன. இந்த முறை 2009-ம் ஆண்டில் மட்டும் 100க்கும் மேற்பட்ட வங்கிகள் மேல் மூடு விழா கண்டுள்ளன. 2008-ல் 20 வங்கிகளும், 2007-ல் மூன்று வங்கிகளும் மூடப்பட்டன. மூடுவிழா காணும் வங்கிகள் எண்ணிக்கை இந்த நிதி ஆண்டின் இறுதியில் மேலும் அதிகரித்திருக்கும் என்று அமெரிக்க நிதித்துறை அறிவித்துள்ளது.
0 comments:
கருத்துரையிடுக