ஞாயிறு, 11 அக்டோபர், 2009

திருவிதாங்கோட்டில் பெண் வன்கொடுமை சட்டத்தில் திமுக கவுன்சிலர் கைது

திருவிதாங்கோடு பேரூராட்சி 6-வது வார்டு கவுன்சிலர் வேலப்பன் (37). இவர் திமுகவை சேர்ந்தவர் ஆவார். நேற்று மாலை இவர் பேரூராட்சி நிர்வாக அதிகாரி கண்மணியை சந்திக்க சென்றார். அப்போது அவரது அலுவலகத்தில் இளநிலை உதவியாளர் சபினா, பதிவறை எழுத்தர் சமீமா பீவி ஆகியோர் இருந்தனர். அப்போது பெண் அதிகாரிகள் இருவரையும் கவுன்சிலர் வேலப்பன் ஆபாச வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. 
இதனால் அங்கிருந்த பணியாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது பற்றி பேரூராட்சி நிர்வாக அதி காரி கண்மணி தக்கலை போலீசில் புகார் செய்தார். இந்த புகாரின் பேரில் தக்கலை போலீசார் விசா ரணை நடத்தி வேலப்பனை கைது செய்தனர். இவர் மீது 2002ம் ஆண்டு பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ், போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ், கவுன்சிலர் ஒருவர் கைது செய்யப்பட்டு இருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

0 comments:

கருத்துரையிடுக