வெள்ளி, 9 அக்டோபர், 2009
அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு
2009ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவுக்கு வழங்கப்படுகிறது. அமைதி நோபல் பரிசுக்காக மொத்தம் 205 பேரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டிருந்தன. அதிலிருந்து பாரக் ஒபாமாவை நோபல் விருதுக் கமிட்டி தேர்வு செய்து அறிவித்துள்ளது.
இதுகுறித்து நோபல் கமிட்டி வெளியிட்டுள்ள செய்தியில், மக்களுக்கிடையே ஒத்துழைப்பை வலுப்படுத்தியமைக்காகவும், சர்வதேச ரீதியில், அணு ஆயுதப் பரவலைத் தடுக்க பாடுபட்டமைக்காகவும், சர்வதேச நாடுகளிடையே நல்லெண்ணத்தை உருவாக்க பாடுபட்டமைக்காகவும் பாரக் ஒபாமாவுக்கு நோபல் பரிசு வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நோபல் பரிசு பெறும் ஒபாமாவுக்கு 1.4 மில்லியன் டாலர் பரிசும், தங்கப் பதக்கமும், சான்றிதழும் வழங்கப்படும்.
Labels:
அமெரிக்கா,
ஒபாமா,
நோபல் பரிசு
0 comments:
கருத்துரையிடுக