வியாழன், 15 அக்டோபர், 2009
குழந்தைகள் டெலிவிஷன் பார்க்க தடை
குழந்தைகள் நல்வாழ் விற்காக ஆஸ்திரேலியா நாட்டு அரசு ஒரு வழி காட்டுதல் நெறிமுறையை வகுத்துள்ளது. அதன்படி 2 வயதுக்குட்பட்ட குழந்தைகள் டெலிவிஷன் பார்க்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
2 வயதுக்குட்பட்ட குழந்தைகள் டெலிவிஷன் பார்ப்பதால் அவர்களின் மொழி பயிற்சி தடைபடுகிறது. ஓடியாடி விளையாடாமல் ஒரே இடத் தில் டி.வி. நிகழ்ச்சிகளை பார்ப்பதால் அவர்களின் உடல் குண்டாக வாய்ப்பு ஏற்படுகிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 2 வயது முதல் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் நாள் ஒன்றுக்கு ஒரு மணி நேரம் மட்டும் டி.வி. அல்லது டி.வி.டி.யில் நிகழ்ச்சிகளை பார்க்கலாம் என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
சமீபத்தில் ஆஸ்திரேலிய அரசு ஒரு சர்வே நடத்தியது. அதில் பிறந்த 4 மாத குழந்தை நாள் ஒன்றுக்கு 44 நிமிடம் டி.வி. பார்ப்பதும், 4 வயதுக்குட்பட்ட குழந்தைகள் 3 மணி நேரத்தை டி.வி. பார்ப்பதில் கழிப்பதும் தெரியவந்தது.
இதனால் பள்ளிகளில் 6 முதல் 8 சதவீதம் வரை உடல் பருமனான குழந்தைகள் உள்ளனர். இதை தடுக்கவே இதுபோன்ற நெறிமுறை வகுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதற்கிடையே குழந்தைகள் அதிகநேரம் டி.வி. பார்ப்பதை பெற்றோர்களும் தடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Labels:
ஆஸ்திரேலியா,
குழந்தைகள்
0 comments:
கருத்துரையிடுக