வியாழன், 15 அக்டோபர், 2009

குவைத் நாட்டில் பெண் எம்.பி.க்கள் "முக்காடு'' அணிய மறுப்பு

குவைத் நாட்டில் முதல் முறையாக பெண்கள் கடந்த மே மாதம் எம்.பி.க்களாக நியமிக்கப்பட்டனர். அவர்களில் ரோலா டஷ்டி, அசீல் அல் அவாதி ஆகிய 2 பேர் பாராளுமன்றத்துக்கு முக்காடு அணிந்து வர மறுத்து விட்டனர். இதற்கு மற்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்கள் ஷரியத் சட்டத்தை மீறி செயல்படுவதாக குற்றஞ்சாட்டினார்கள்.

பாராளுமன்றத்தில் பேசிய பெண் எம்.பி. டஷ்டி கூறுகையில், நீங்கள் ஒரு பெண்ணை எதை அணிய வேண்டும் என்று கட்டாயப்படுத்த முடியாது. இது ஈரானோ அல்லது சவுதி அரேபியாவோ அல்ல என்று குறிப்பிட்டார். அதோடு, பாராளுமன்றத்தில் ஷரியத் சட்டத்தை பின்பற்றவேண்டும் என்ற சட்டத்தை திருத்தி அமைக்க வேண்டும் எனறும் கோரினார்.

0 comments:

கருத்துரையிடுக