வியாழன், 22 அக்டோபர், 2009
பனாமா கடலில் கடும் நிலநடுக்கம்-நியூயார்க்கில் லேசான பூகம்பம்
பனாமா நகருக்கு அருகே கடல் பகுதியில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது.நிலநடுக்கத்தின் அளவு 6.1 ரிக்டராக இருந்ததாகவும், பனாமாவின் பசிபிக் கடல் பகுதியில், நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் அது தெரிவித்துள்ளது.டேவிட் நகரிலிருந்து தெற்கே 179 கிலோமீட்டர் தொலைவிலும், பனாமா சிட்டியிலிருந்து 410 கிலோமீட்டர் தென் மேற்கிலும் இந்த நிலநடுக்கத்தின் மையம் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அதே போல நியூயார்க் நகரின் அல்பானி பகுதியில் லேசான பூகம்பம் ஏற்பட்டுள்ளது. இதை அமெரிக்க பூகோளவியல் ஆய்வுக் கழகம் உறுதிப்படுத்தியுள்ளது.இந்த பூகம்பம் செவ்வாய்க்கிழமை இரவு 9.32 மணிக்கு ஏற்பட்டது. இதன் அளவு 2.9 ரிக்டராகப் பதிவாகியுள்ளது. பெர்ன் நகரில் இதன் மையம் இருந்துள்ளது.ஸ்கலோரி கவுன்டி பகுதியிலும் இதன் தாக்கத்தை மக்கள் உணர்ந்துள்ளனர். இதனால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து தகவல் ஏதும் இல்லை.இதே பகுதியில் கடந்த மே மாதம் 3 ரிக்டர் அளவிலான பூகம்பம் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Labels:
அமெரிக்கா,
நிலநடுக்கம்
0 comments:
கருத்துரையிடுக