வியாழன், 22 அக்டோபர், 2009

உயிருடன் புதைக்கப்பட்ட பாலஸ்தீனியர்கள்


கடந்த டிசம்பரில் இஸ்ரேல் பாலஸ்தீன் மீது அநியாயமாக நடத்திய ஆக்கிரமிப்பு போரில் பல பாலஸ்தீன அப்பாவி பொது மக்களை வேண்டுமென்றே கொன்றுள்ளனர் என்றும் பலரை உயிருடன் புதைத்துள்ளனர் என்றும் பாலஸ்தீன மனித உரிமை ஆர்வலர் நஷாத் அல் வாஹிதி தெரிவித்தார்.வாஹிதி அவருடைய அறிக்கையில், "பாலஸ்தீனிய பொதுமக்களை இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படைகள் கைதிகளாக பிடித்து அவர்களை கொன்று குவித்துள்ளனர்" என்று கூறினார்.அவர் மேலும் கூறியதாவது, "காசாவின் கிழக்கு பகுதியில் உள்ள அல் ஜைத்தூன் பகுதியை ஆக்கிரமித்த இஸ்ரேலிய படைகள் காயம் பட்ட பல பாலஸ்தீன பொதுமக்களை உயிருடன் புதைத்துள்ளனர்.மேலும் , காசா மீதான இஸ்ரேலின் இந்த தாக்குதலிற்கு பிறகு பல பாலஸ்தீன பொதுமக்கள் காணாமல் போயுள்ளனர். இவர்களின் நிலை என்ன என்பது இன்று வரை தெரியாமல் உள்ளது என்று கூறினார்.இவர்கள் கொல்லப்பட்டுவிட்டனரா இல்லை இஸ்ரேலிய ரகசிய சிறைகளில் அடைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்படுகின்றனரா என்று தெரியவில்லை.

0 comments:

கருத்துரையிடுக