வெள்ளி, 23 அக்டோபர், 2009
ஷார்ஜாவில் விபத்தில் இறந்த கணவரின் உடலை மீட்டு தர மனைவி கோரிக்கை
திருவண்ணாமலை மாவட்டம், குயிலம் கிராமத்தை சேர்ந்தவர் சாகுல் அமீது(24). இவரது மனைவி ரசியா. இவர்களுக்கு சவுகத்அலி என்ற குழந்தை உள்ளது.கடந்த 2 ஆண்டுக்கு முன்பு ஷார்ஜாவில் உள்ள தனியார் கம்பெனியில் சாகுல் அமீது வேலைக்கு சென்றார். இந்நிலையில், கடந்த 3 மாதமாக அவரிடம் இருந்து எந்த தொடர்பும் இல்லை. இதனால், சந்தேகம் அடைந்த குடும்பத்தினர், அவர் வேலை செய்த கம்பெனியில் தொடர்பு கொண்டும் சரியான தகவல் கிடைக்கவில்லை. இந்நிலையில், கடந்த 2 நாளுக்கு முன்பு ஷார்ஜாவில் உள்ள ஒரு தொண்டு நிறுவனத்தை சேர்ந்தவர்கள், போனில் சாகுல் அமீதின் குடும்பத்தினரை தொடர்பு கொண்டனர். அப்போது, வாகன விபத்தில் சாகுல் அமீது இறந்துவிட்டதாகவும், அவரது உடலை பெற்றுக்கொள்ளுமாறும் தெரிவித்தனர். இதைக்கேட்ட சாகுல்அமீது மனைவி கதறி அழுதார். பின்னர், திருவண்ணாமலை கலெக்டர் ராஜேந்திரனை சந்தித்து சாகுல் அமீதின் உடலை பெற்றுத்தர உதவுமாறு மனு அளித்தனர்.
Labels:
மரண செய்தி,
வளைகுடா;ரெயில்
0 comments:
கருத்துரையிடுக