செவ்வாய், 6 அக்டோபர், 2009
ஹாட்மெயில் பாஸ்வேர்டுகள் அம்பலம்-மைக்ரோசாப்ட் அதிர்ச்சி
மைக்ரோசாப்ட் நிறுவனத்துக்கு சொந்தமான ஹாட்மெயிலின் ஆயிரக்கணக்கான கணக்குகளின் பாஸ்வேர்டுகளை சுட்ட மர்ம கும்பல் ஒன்று அதை மற்றொரு இணையத்தளத்தில் வெளியிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் மைக்ரோசாப்ட் நிறுவனத்துக்கு நேற்று தான் தெரிய வந்துள்ளது. இதையடுத்து மைக்ரோசாப்ட் அந்த இணையத்தளத்தில் இருந்த பாஸ்வேர்டு உள்ளிட்டவற்றை நீக்கியுள்ளது. மேலும் மைக்ரோசாப்ட் குறிப்பிட்ட அந்த கணக்குகளையும் முடக்கியுள்ளது. அந்த இ-மெயில் கணக்குகளை பதிவு செய்திருக்கும் பயனாளிகளை தொடர்பு கொண்டு அவர்களுக்கு மீண்டும் சேவை வழங்கப் போவதாக தெரிவித்துள்ளது.
ஆனால், அந்நிறுவனம் மொத்தம் எத்தனை பயனாளிகளின் கணக்குகள் பாதிக்கப்பட்டது என்பதை தெரிவிக்க மறுத்துவிட்டது என்றாலும் சில பத்திரிகைகள் சுமார் 10,000 கணக்குகளின் பாஸ்வேர்டுகள் வெளி வந்திருக்கலாம் என தெரிவிக்கின்றன.
Labels:
அமெரிக்கா,
மைக்ரோசாப்ட்
0 comments:
கருத்துரையிடுக