புதன், 7 அக்டோபர், 2009
சனி கிரகத்தைச் சுற்றி மாபெரும் புதிய வளையம்: நாசா கண்டுபிடிப்பு
சூரியனைச் சுற்றியுள்ள கோள்களில் ஒன்றான சனியைச் (Saturn) சுற்றி வளையம் இருப்பது தெரிந்த விடயம் என்றாலும், அந்த கோளைச் சுற்றி புதிதாக ஒரு மாபெரும் வளையம் இருப்பதை நாசா கண்டறிந்துள்ளது.
FILEசனி கிரகத்தைச் சுற்றி பனிக்கட்டி மற்றும் தூசு மண்டலங்களால் உருவான இந்த புதிய வளையம், சனிக்கு மிக நெருக்கமாக உள்ள வளையத்தில் இருந்து 27 பாகை (degree) அளவுக்கு சாய்ந்த நிலையில் உள்ளதாக நாஸா ஜெட் புரொப்பல்ஷன் ஆய்வகத்தின் செய்தித் தொடர்பாளர் விட்னி க்ளவின் தெரிவித்துள்ளார்.
தூசுப் படலத்தால் உருவாகியிருந்தாலும், புதிய பிரம்மாண்ட வளையத்தின் வெப்பநிலை மைனஸ் 316 டிகிரி பாரன்ஹீட் அளவுக்கு உள்ளதாகவும் நாசா கண்டறிந்துள்ளது. இதுவரை இந்த புதிய வளையத்தின் இருப்பிடத்தை இன்ஃப்ரா ரெட் கருவிகள் மூலம் யாரும் கண்டறியவில்லை எனக் கூறப்பட்டுள்ளது.
நாசா கண்டறிந்துள்ள புதிய பிரம்மாண்ட வளையம் சனியின் ஒருபுறம் இருந்து 3.7 மில்லியன் மைல் (5.95 மில்லியன் கி.மீ) தூரத்திலும், மறுபுறம் 7.4 மில்லியன் மைல் (11.9 மில்லியன் கி.மீ) தூரத்திலும் அமைந்துள்ளது. இந்த பிரம்மாண்ட வளையத்திற்குள் ஒரு பில்லியன் பூமியை நிரப்ப முடியும் என்று நாசா கணக்கிட்டுள்ளது.
0 comments:
கருத்துரையிடுக