வெள்ளி, 30 அக்டோபர், 2009

தீவிரவாத சதி- அமெரிக்கரை விசாரிக்கும் இந்தியா

லஷ்கர் இ தொய்பா அமைப்புடன் இணைந்து இந்தியாவில், தீவிரவாத செயலை நிகழ்த்துவதற்கான சதித் திட்டம் தீட்டியதாக கைது செய்யப்பட்ட அமெரிக்கரை விசாரிக்க இந்தியாவிலிருந்து உளவுப் பிரிவு குழு ஒன்று அமெரிக்கா செல்கிறது.
அடுத்த வாரம் இந்தியக் குழு அமெரிக்கா செல்கிறது. இக்குழுவில் ஐபி, ரா, ஆகியற்றின் அதிகாரிகள் இடம் பெறுவர். சமீபத்தில் அமெரிக்க எப்.பி.ஐ அதிகாரிகள் டேவிட் கோல்மேன் என்ற அமெரிக்கரையும், பாகிஸ்தானில் பிறந்த கனடா நாட்டு பிரஜையையும் கைது செய்தனர். இவர்கள் லஷ்கர் இ தொய்பாவுடன் இணைந்து மும்பைத் தாக்குதலைப் போல இந்தியாவில் மீண்டும் தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டியிருந்ததாக எப்.பி.ஐ தெரிவித்தது.
இந்த நிலையில் கோல்மேனை விசாரிக்க இந்தியக் குழு செல்கிறது. இதுகுறித்து மத்திய `உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறுகையில், இதுகுறித்து எப்.பி.ஐயுடன் விவாதித்து வருகிறோம். இந்தியாவில் இதுதொடர்பாக என்ன செய்யப்பட வேண்டும் என்பது குறித்து ஆராய்ந்து வருகிறோம்.
இந்தியாவுடன் பல முக்கிய ஆவணங்களை எப்.பி.ஐ. பகிர்ந்து கொண்டுள்ளது. அங்குள்ள கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனு, புகார் மனு குறித்த விவரம் உள்ளிட்டவை குறித்து எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார்.

0 comments:

கருத்துரையிடுக