இதுவரை கிடைத்த தகவலின்படி இந்த தாக்குதலில் 8 தலித் பெண்கள் சிவ சேனை குண்டர்களால் தாக்கப்பட்டுள்ளனர். காவல் துறை மற்றும் ஊடகமும் இந்த விவகாரத்தை கடந்த 5 வாரங்களாக பொத்தி பாதுகாத்து வைத்து அதன் மூலம் சிவ சேனை குண்டர்களை இந்த வழக்கிலிருந்து பாதுகாத்து வந்துள்ளனர்.
காவல் துறையினரின் கூற்றுப்படி, இந்த தாக்குதலானது தண்ணீர் எடுப்பதில் பிரச்சனை ஏற்பட்ட இரு கும்பலுக்குள் நடந்த மோதல் எனவும் அவர்கள் ஒருவரை ஒருவர் வாள்களால் தாக்கிக் கொண்டனர் என்றும் கூறுகின்றனர்.
கடந்த 28 ஆம் தேதி அதிகாலை, தாக்குதலில் காயம்பட்டு அனுமதிக்கப்பட்ட நான்கு பெண்களையும் வெளியேற்றக் கோரி மருத்துவ கல்லூரியின் மருத்துவமனையை காவல் துறையினர் வற்புறுத்தி உள்ளனர். இது அந்த கொலை வெறி தாக்குதலில் ஈடுபட்ட சிவ சேனா குண்டர்கள் மீது தொடரப்பட்ட வழக்கின் காட்டத்தை குறைப்பதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கையாகும். மேலும் அந்த பெண்களை வெளியேற்றக் கோரி மருத்துவக் கல்லூரி முன்பு சிவ சேனாவினர் கூடி மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளனர்.
ஆரம்பத்தில் அவர்களின் அநியாயமான கோரிக்கைகளுக்கு தலையசைக்காத மருத்துவர்கள் பின்னர் அவர்களின் வேண்டுகோள்களுக்கிணங்க அசைந்து கொடுக்கத் தொடங்கினர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 4 பெண்களில் மூன்று பெண்களை அவர்கள் வெளியேற்றி விட்டனர்.
இவர்களை சிவ சேனாவினர் வேறு மருத்துவமனையில் அனுமதிப்பதாக கூறி வாடகை வண்டியில் ஏற்றிச் சென்று அவர்களது வீட்டிலேயே இறக்கி விட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட பெண்கள் மருத்துவமனை செல்ல முயன்ற பொழுது அந்த பகுதியில் பணியில் இருந்த காவல் துறையினர் அவர்களை தடுத்து வெளியே அவர்களுக்கு ஆபத்து என்று கூறி வீட்டிற்கு அனுப்பினர்.இந்த தகவல் தொடுவே பகுதி மக்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்களால் தெரிவிக்கப்பட்டது.
0 comments:
கருத்துரையிடுக