வியாழன், 22 அக்டோபர், 2009
இந்துத்துவ தீவிரவாதம் - வெளிச்சத்திற்கு வரும் உண்மைகள்
தீவிரவாதம் என்ற சொல் முஸ்லிம்களுக்கு மட்டுமே சொந்தம் என்று இந்திய மக்கள் அனைவருமே நம்பிக் கொண்டிருந்த வேளையில் இந்துத்துவ தீவிரவாதம் என்ற உண்மையை மக்களுக்கு அறிமுகம் செய்த மாவீரர் (Anti Terrorism Chief) ஹேமந்த் கர்கரேவிற்கு நன்றி. (அவரது மறைவிலும் பல மர்மங்கள் உள்ளன). கர்கரே தான் இந்த உலகத்திற்கு இந்துத்துவா தீவிரவாதத்தின் அபாயத்தினை உணர்த்தினார். மலேகான் குண்டு வெடிப்பில் பயன் படுத்தப்பட்ட கார் பிரக்யா சிங் என்ற பெண் சாது (அவர்கள் அப்படிச் சொல்கிறார்கள்) விற்கு சொந்தமானது என்றாலும் அவர் அது தனக்கு சொந்தமானது என்பதினை மறைக்க பல முயற்சிகளை மேற்கொண்டும் தோல்வியே மிஞ்சியது. இவரின் இந்த முயற்சியினை கர்கரே மலேகான் குண்டு வெடிப்பிற்கு பின் கூறினார்.
இதில் இன்னும் ஒரு விசேஷம் என்னவெனில், இந்த குண்டு வெடிப்பில் இந்த பெண் சாமியாருடன் இந்திய இராணுவத்தின் முன்னாள் அதிகாரி ஒருவரும் நேரடியாக சம்பந்தப்பட்டிருப்பது தான். இந்த குண்டு வெடிப்பிற்கு காரணம் அபினவ் பாரத் என்ற அமைப்பு என்று கூறப்பட்டது. ஆனால் அந்த அமைப்பின் மேல் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை.. (ஆனால் ஒன்றும் செய்யாத பழி பாவங்களுக்காக பல அப்பாவி முஸ்லீம் இளைஞர்கள் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள், பல இஸ்லாமிய அமைப்புகள் தடை செய்யப்பட்டுள்ளன.)இது போன்ற ஹிந்துத்துவ தீவிரவாத இயக்கங்கள் மீதான நடவடிக்கைகளை மேற்கொள்ள காவல் துறையினற்கு பா.ஜ.க மட்டுமல்ல பெருவாரியான முஸ்லீம்கள் நம்பிக்கை வைத்துள்ள காங்கிரசும் குறுக்கே நிற்கிறது என்பது தான் உண்மை.
சமீபத்தில் கோவாவில் நடந்த குண்டு வெடிப்பில் பயன்படுத்தப்பட்ட ஸ்கூட்டர் ஒரு இந்துத்துவ தீவிரவாதிக்கு சொந்தமானது. (அந்த தீவிரவாதிகளும் இந்த தாக்குதலில் இறந்து போனது நாமும் நம் நாட்டு மக்களும் செய்த புண்ணியம்). இந்த தீவிரவாதிகள் சனாதன் சன்ஸ்தா என்ற ஒரு அமைப்பை சேர்ந்தவர்கள் என்று தெரிந்தும் இன்னமும் அந்த அமைப்பின் மேல் எந்த விதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. (அவர்கள் தங்களை பாதுகாத்து உத்தம வேஷம் போட போதுமான அவகாசத்தை அரசாங்கமே வழங்குகிறது. )இந்த சனாதன் சன்ஸ்தா அமைப்பினரின் கை ரேகைகள் மகாராஷ்டிரத்தின் மிராஜ் மற்றும் சங்கலி பகுதிகளில் நடந்த மதக்கலவரங்களில் இருப்பதாக காவல் துறை கூறுகின்றது.
இந்த இந்துத்துவா தீவிரவாத அமைப்பின் மேல் இவ்வளவு குற்றங்களும் தேச துரோக கறைகளும் இருந்தாலும் மாநில அரசாங்கம் அந்த அமைப்பின் மீது நடவடிக்கை எடுக்க மறுத்து வருவது ஆச்சர்யத்தை ஏற்படுத்துகின்றது.இது பற்றி சன்ஸ்தா கூறுகையில், "நாங்கள் கல்வி அறிவு படைத்தவர்கள், நாங்கள் கடந்த 10 - 15 வருடங்களாக எங்கள் மதத்திற்காக பாடுபட்டு வருகிறோம்" என்று கூறுகின்றனர்.(அவர்கள் குண்டு வைத்தும், மதக்கலவரங்களை தூண்டியும் தான் பாடுபடுகிறார்கள் போலும்.)காவல்துறையோ, "இது போன்ற அமைப்புகள் தங்களது ஆதிக்கத்தை கோவாவிலிருந்து மலேகான் வரை பரப்பி வருகின்றன என்றும் இவர்களை நீங்கள் எப்படி அழைத்தாலும் இவர்கள் தேசத்திற்கு ஒரு மாபெரும் அச்சுறுத்தல் தான்" என்று கூறுகின்றனர்.
Labels:
இந்துத் தீவிரவாதம்
0 comments:
கருத்துரையிடுக