வியாழன், 29 அக்டோபர், 2009

பயங்கரவாதத்தால் பாதிக்கப்படுவது முஸ்லிம்களே! குடியரசு துணைத் தலைவர்

எந்த மதமும் பயங்கரவாதிகளை ஆதரிப்பதில்லை என்று குடியரசு துணைத் தலைவர் ஹமீது அன்சாரி கூறினார். பயங்கரவாதிகளுக்கு மத ரீதியிலோ அல்லது அரசியல் ரீதியிலோ ஆதரவு கிடையாது என்றும் அவர் கூறினார்.
பயங்கரவாதத்துக்கு எதிராக தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாநாட்டில் பேசும்போது அவர் பயங்கரவாத, அடிப்படைவாத செயல்களை பெரும்பான்மையான மக்கள் ஆதரிக்கவில்லை. மிகச் சிலரே ஆதரிக்கின்றனர். வறுமையில் வாடுபவர்களை ஆசை காட்டி பயங்கரவாதிகள் தங்களுக்கு பயன்படுத்திக் கொள்கின்றனர் என்றார்.
மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் மாநாட்டுக்கு தலைமை தாங்கினார். காஷ்மீர் மாநிலம் நீண்டகாலமாக பயங்கரவாதப் பிரச்னையை எதிர்கொண்டு வருகிறது. எல்லைக்கு அப்பால் இருந்து பயங்கரவாதம் தூண்டிவிடப்படுகிறது என்றார். பயங்கரவாதத்தை ஆதரிப்பவர்களையும் அது விட்டுவைப்பது இல்லை. அதன் கொடிய விளைவுகளில் இருந்து தப்பிக்க முடியாது என்றார்.
சமய கொள்கைகளின் கீழ் பயங்கரவாதத்துக்கு அடைக்கலம் தேடுவதைத் தடுக்க உரிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். மதத்தை குறுகிய வழியிலும் தவறான வழியிலும் அர்த்தம் கற்பிப்பதை சமயச் சான்றோர்களைக் கொண்டு அம்பலப்படுத்த வேண்டும். கடந்த 20 ஆண்டுகளில் காஷ்மீரில் பயங்கரவாதத்தால் பிற மதத்தினரைவிட முஸ்லிம் மக்கள்தான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றார்.

0 comments:

கருத்துரையிடுக