வியாழன், 29 அக்டோபர், 2009

குளச்சல் மீன்பிடிதுறைமுக பணி மீண்டும் நேற்று தொடங்கியது.


குளச்சலில் தமிழக அரசு சார்பில் மீன்பிடிதுறைமுகம் அமைக்க கடந்த 2008-ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது. முதல் கட்டமாக துறைமுகத்துக்கு மேற்கு பகுதியில் அன்னாங்கல் பாறை வரை கடலில் அலை தடுப்பு சுவர் அமைக்கப்பட்டது. தொடர்ந்து கிழக்கு பகுதியில் அலை தடுப்பு சுவர் அமைக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் கிழக்கு தடுப்பு சுவரை 100 மீட்டர் தூரம் நீட்டிக்க வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர். இதனால் துறைமுக பணி முடங்கியது. இந்த நிலையில் நேற்று முன்தினம் தமிழக சட்டமன்ற பொது கணக்கு குழுவினர் குளச்சல் மீன் பிடித்துறைமுக பணியை ஆய்வு செய்தனர். மீனவர் பிரதிநிதிகளிடம் ஆலோசனை நடத்தினர். அப்போது மீனவர்கள் கிழக்கு பகுதி தடுப்பு சுவரை 100 மீட்டர் நீடிக்க வேண்டும் என்றனர் இதற்கு சட்டமன்ற கணக்கு குழுவினர் 50 மீட்டர் நீட்டிக்க அரசுக்கு பரிந்துறைப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து நேற்று முதல் மீண்டும் அலைதடுப்பு சுவர் கட்ட கற்கள் போடும் பணி தொடங்கியது

0 comments:

கருத்துரையிடுக