வெள்ளி, 16 அக்டோபர், 2009

உஸ்மானிய இஸ்லாமிய கிலாபத்தின் கடைசி மனிதர் மரணமானார்


துருக்கிய உஸ்மானிய கிலாபத்தை ஆட்சி புரிந்த வம்சத்தின் கடைசி மனிதர் அர்த்துக்குல் உஸ்மான் உஸ்மான் குல் தனது 97வது வயதில் ஸ்தான்பூலில் மரணமானார் .

இவர் துருக்கிய உஸ்மானிய கிலாபத்தின் ஆட்சியாளரான சுல்தான் 2ம் மஹ்மூத் அவர் களின் பேரப் பிள்ளையாவார். துருக்கியின் அனைத்து பிரதேசங்களிலிருந்தும் இவரது ஜனாஸா நிகழ்வுகளில் இலட்சக்கணக்கான மக்கள் பங்குகொண்டனர்.
600 வருட கால துருக்கிய உஸ்மானிய கிலாபத் வடஆபிரிக்கா, மத்திய கிழக்கு உட்பட ஐரோப்பாவின் கணிசமான பகுதிகளை ஆட்சி செய்தது. எனினும் யூதர்கள், பிரிட்டன் மற்றும் அறபு ஆட்சியாளர்கள் ஒன்றிணைந்து 1923ல் உஸ்மானியப் கிலாபத்தை பதவி கவிழ்த்து கிலாபத் தையும் ரத்துச் செய்தனர். அதற்குப் பகரமாக இஸ்லாத்திற்கு விரோதமான ஒரு இராணுவ சர்வதிகாரத்தை ஆட்சியில் அமர்த்தினர். உஸ்மானிய ஆட்சியளர்கள் துருக்கியிலிருந்து நாடு கடத்தப்பட்டனர்.
உஸ்மான் 1912ல் ஸ்தான்பூலில் பிறந்தார். அவருக்கு 10 வயதாக இருக்கும் போது உஸ்மானிய கிலாபத் கவிழ்க்கப்பட்டது. இதனால் ஜெனீ வாவில் தங்கியிருந்த உஸ்மான் குல், 70 ஆண்டுகளாக நாடு திரும்ப முடியாமல் இருந்தார் . இவர் ஐக்கிய அமெரிக்காவில் தங்கியிருந்தபோது துருக்கிய பிரதமர் அர்தூகான் ஜனாதிபதி அப்துல்லாஹ் குல் ஆகியோர் இவரை அடிக்கடி சந்தித்து வந்தனர். பின்னர் நாடு திரும்பிய இவர் அண்மையில் தனது 97வது வயதில் ஸ்தான்பூழ் தனியார் வைத்திய சாலை ஒன்றில் வபாத்தானார் இன்னாலில்லாகி வஇன்னா இலய்ஹி ராஜியூன்.

0 comments:

கருத்துரையிடுக