சனி, 14 நவம்பர், 2009

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மையம்; மீண்டும் மழை பெய்ய வாய்ப்பு.

தமிழ்நாட்டில் கடந்த 7நாட்களாக இடைவிடாது மழை பெய்து வந்த நிலையில் கன்னியாகுமரி அருகே உருவான பியான் புயலின் காரணமாக மேலும் 2நாட்களுக்கு தொடர்ந்து மழை பெய்தது. “பியான்” புயல் மகாராஷ்டிரா அருகே கரையை கடந்த பின் தமிழ்நாட்டில் மழை நின்று விட்டது.

கடந்த 2நாட்களாக அதிக மழையின்றி ஒரு சில ஊர்களில் மட்டுமே எப்போதாவது மழை பெய்தது. கலைந்து சென்ற கருமேக கூட்டங்கள் மீண்டும் திரண்டு மழை பொழிய 2நாட்கள் ஆகும் என்று வானிலை மையம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் இலங்கைக்கு தெற்கே வங்ககடலில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது.
இது தமிழ்நாட்டை நோக்கி நகர்ந்து வருவதால் மீண்டும் பலத்த மழை பெய்ய வாய்ப்பு வருவாகி உள்ளது என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.
கடலோர மாவட்டங்களில் பல இடங்களில் இன்று மழை இருக்கும் மற்ற மாவட்டங்களில் லேசான மழை பெய்யும்.
சென்னையில் இன்று காலையிலேயே வானம் மேகமூட்டமாக இருந்தது. அடுத்த 24மணி நேரத்தில் தமிழ்நாடு, புதுச்சேரியில் பலஇடங்களில் மழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் அறிவித்துள்ளது.

0 comments:

கருத்துரையிடுக