திங்கள், 9 நவம்பர், 2009
இந்தோனேஷியாவில் கடும் நிலநடுக்கம்
இந்தோனேஷியாவில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோளில் 6.7 புள்ளிகளாகப் பதிவான இந்த நிலநடுக்கம் நாட்டின் கிழக்குப் பகுதிகளை பயங்கரமாக உலுக்கியது. இதில் பல கட்டடங்கள் இடிந்து விழுந்ததில் ஒருவர் பலியானார் 90க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
இந்த நிலநடுக்கத்தால் பிமா என்ற நகரம் தான் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளது. இங்கு 4 பள்ளிகள், ஒரு மருத்துவமை, 10 வீடுகள் தரைமட்டமாகிவிட்டன. மேலும் பல கட்டடங்கள் விரிசல் கண்டுவிட்டன. நிலத்துக்கடியில் 25 கிமீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் சுனாமி ஏதும் ஏற்படவில்லை.
இந் நிலையில் ஆஸ்திரேலியா அருகே உள்ள இன்று மாலை பிஜி தீவில் மிக பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோளில் 6.7 புள்ளிகளாகப் பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கம் கடலுக்கடியில் 585 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டதால் சுனாமி ஏதும் ஏற்படவில்லை. நேற்று திபெத்திலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
Labels:
இந்தோனேசியா,
நிலநடுக்கம்
0 comments:
கருத்துரையிடுக