திங்கள், 2 நவம்பர், 2009

இறுதித் தூதர் நபிகளாரைப் பற்றிய திரைப்படம்.

கத்தாரை மையமாக கொண்ட ஊடகம் ஒன்று நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாற்றை பற்றி சர்வதேச அளவிலான திரைப்படம் ஒன்றை தயாரிக்க உள்ளது. "இது நபிகளார் பற்றி மேற்கத்தியவர்கள் பரப்பிவரும் தவறான கருத்துகளை தகர்ப்பதற்காக" என்று அந்த ஊடகம் கூறுகின்றது.
"இந்த திரைப்படம் நபி(ஸல்) அவர்களின் பிறப்பிற்கு முந்தயதிலிருந்து அவரது இறப்பு வரை பற்றியதாகும்." இதனை அஹ்மெத் அப்துல்லாஹ், Alnoor Holdings நிறுவனத்தின் தலைவர் கூறினார்.
அவர் மேலும் கூறியதாவது, "இந்த படம் நபி(ஸல்) அவர்களின் மனித நேயத்தை அழுத்திக்கூறும்" என்று தெரிவித்தார்.
இந்த் திரைப்படம் 150 மில்லியன் டாலர்கள் செலவில் வருகிற 2011 ஆம் வருடத்தில் தொடங்க இருக்கின்றது. இதன் படப்பிடிப்பு 25 - 30 மாதங்களில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிறுவனம் ஏற்கனவே 200 மில்லியன் டாலர்களை இதற்காக ஒதுக்கிவிட்டது.
இந்த திரைப்படம் எடுப்பது குறித்து பிரபல திரைப்பட நிறுவனங்களிடம் பேச்சு வார்த்தை மேற்கொண்டு வருவதாக அல்நூர் நிறுவனம் கூறியுள்ளது.
இதில் ஆங்கிலம் பேசும் முஸ்லீம்கள் நடிப்பார்கள் என்றும் இந்த படம் முஸ்லீம்களுக்கும் முஸ்லீம் அல்லாதவர்களுக்கும் இஸ்லாம் மற்றும் நபி(ஸல்) அவர்களின் வாழ்கை குறித்து விளக்கும் விதமாக இருக்கும் என்று அப்துல்லா கூறினார்.
இந்த திரைப்படத்தை தயாரிக்க Barrie M. Osborne தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் The Lord Of The Rings என்ற ஆங்கிலப் படத்திற்காக ஆஸ்கார் விருது பெற்றவராவார்.
இஸ்லாமிய அறிஞரான ஷேக் யூசுப் அல் கர்ளாவி இந்த திரைப்படத்தின் தயாரிப்பை மேற்பார்வையிடுவார். அதில் இவர், திரைப்படத்தின் திரைக்கதை, படமாக்கும் விதம் மற்றும் தயாரிப்பு ஆகியவைகளை மேற்பார்வையிடுவார் என்று அப்துல்லாஹ் கூறினார்.
ஷேக் அல் கர்ளாவி சர்வதேச முஸ்லீம் அறிஞர்களின் கூட்டமைப்பின் தலைவராவார். அவர் இது பற்றி கூறுகையில், "இஸ்லாத்திற்கு தொண்டு செய்வதே இந்த திரைப்படத்தின் குறிக்கோள்" என்று கூறினார்.

0 comments:

கருத்துரையிடுக