இது குறித்து பெண்கள் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:
கேரளாவில் 94 சதவீத திருமணங்களும் வரதட்சணை கொடுத்து நடத்தப்படுகிறது. வரதட்சணை தடை சட்டம் அமலில் வந்து 40 ஆண்டுகள் ஆகியும், இதுவரை வரதட் சணை கேட்டதாக 71 பேர் மட்டுமே புகார் செய்துள்ளனர். சொத்துக்கள் உள்ள பெண்களின் எண் ணிக்கையும் குறைந்து வருகிறது.
ஆடம்பர திருமண செலவு களை குறைப்பதற்காக சட்டம் கொண்டு வருவதற்கான ஆலோசனைகள் கடைசி கட்டத்தை அடைந்துள்ளது. வருகிற ஜனவரி மாதம் முதல் கல்லூரி உள்ளிட்ட வளாகங் களிலும், ஊடகங்கள் வழியா கவும் ஆடம்பர திருமணத் துக்கு எதிராக பிரசாரம் தொடங்கப்படும்.
வரி விதிப்பு
இந்த கருத்தை உட்படுத்தி மேஜிக் நிபுணர் கோபிநாத் முதுக்காடு சார்பில் கேம்பஸ்கள் உள்ளிட்ட இடங்களில் அரசின் நேரடி பொறுப்பில் மேஜிக் விழிப் புணர்வு நிகழ்ச்சி நடத்த ஆலோசிக்கப்பட்டு வரு கிறது.
திருமணத்திற்காக ரூ.40 ஆயிரத்துக்கு மேல் செலவிட் டால் அந்த தொகைக்கு வரி விதிக்க வேண்டும் என்று கமிஷன் சார்பில் பரிந்துரைக் கப்பட்டுள்ளது.
சட்டம் அமைப்பதற்கு முன்னதாக மாநிலத்தின் அரசியல் & கலாசார பிரிவைச் சேர்ந்த இளைஞர் சங்க பிரதிநிதிகளுடனும், பெண்கள் அமைப்புகளுடனும் சமூகநலத் துறை சார்பில் ஆலோசனை நடந்தது. சாதி &மத சமூக அமைப்பு தலைவர்களுடன் இதுபற்றி ஆலோசனை இனிமேல் நடைபெற உள்ளது. 300 பேருக்கு கூடுதலான மக்கள் அமரும் வசதி உடைய ஆடிட்டோரியங்களுக்கு லைசன்ஸ் வழங்கக்கூடாது என்று ஆலோசனை கூட்டத் தில் பேசப்பட்டது. இதன் மூலம் அதிகமான மக்களை திருமணத்துக்கு அழைப்பது தவிர்க்கப்படுமென்று எதிர்பார்க்கப்படுகிறது. அரசு ஊழியர்கள் வரதட்சணை பெற்று திருமணம் செய்வதை கட்டுப்படுத்த வேண்டும். ஆடம்பர திருமணங்களில் பங்கேற்பதில் இருந்து அரசியல் தலைவர்கள் விலக்கி நிற்க வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கை யில் கூறப்பட்டுள்ளது.
0 comments:
கருத்துரையிடுக