வியாழன், 17 டிசம்பர், 2009

புதிய 20 ரூபாய் நோட்டுக்கள் வெளியீடு!


மகாத்மா காந்தி வரிசை 2005-ஐ சேர்ந்த புதிய 20 ரூபாய் நோட்டுக்களை ரிசர்வ் வங்கி விரைவில் வெளியிட உள்ளது. ரிசர்வ் வங்கியின் ஆளுநர் முனைவர் டி சுப்பாராவ் கையப்பமிட்ட நோட்டின் இரு வரிசை எண்களுக்கும் நடுவே உட்பொதிந்த ஆங்கில எழுத்து இல்லாத புதிய 20 ரூபாய் நோட்டுக்களை ரிசர்வ் வங்கி விரைவில் வெளியிட இருக்கிறது.
ஆளுநரின் கையெழுத்தைத் தவிர 2006 ஆகஸ்ட் 16 வெளியிடப்பட்ட கூடுதலான/புதிய பாதுகாப்பு அம்சங்களைக் கொண்ட மகாத்மா காந்தி நோட்டுக்களின் வரிசை 2005-ன் வடிவம் மற்றும் பிற அம்சங்கள் அனைத்தும் எந்தவித மாற்றமும் இன்றி வெளியிடப்பட உள்ள புது நோட்டுக்களில் இருக்கும்.
இதற்கு முன் ரிசர்வ் வங்கி வெளியிட்ட அனைத்து 20 ரூபாய் நோட்டுக்கள் சட்டப்படி தொடர்ந்து செல்லத்தக்கதாக இருக்கும்.  இத்தகவலை சென்னை ரிசர்வ் வங்கியின் துணைப் பொதுமேலாளர் காயா திரிபாதி செய்திக்குறிப்பு ஒன்றில் தெரிவித்துள்ளார்.

0 comments:

கருத்துரையிடுக