ஞாயிறு, 27 டிசம்பர், 2009

சென்னை ஐ.ஐ.டி.யில் +2 முடித்துவிட்டு நேரடியாக சிறப்பு எம்.ஏ. படிப்பு!

பிளஸ்-2வுக்குப் பிறகு நேரடியாக எம்.ஏ. படிக்கும் புதிய கல்வித் திட்டத்தை சென்னை ஐ.ஐ.டி. 3 ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தியது. இதில் ஆங்கிலம், பொருளாதாரம், வளர்ச்சி ஆகிய 3 பாடப்பிரிவுகளில் ஒருங்கிணைந்த எம்.ஏ. படிப்பு வழங்கப்படுகிறது.
த‌ற்போது நில‌வி வ‌ரும் கல்விச்சூழல், வேலைவாய்ப்பு ஆகியவற்றை மையமாக வைத்து ஐ.ஐ.டி. இதற்கான பாடப்பிரிவுகளை உருவாக்கி இருக்கிறது. 2010ஆம் ஆண்டு எம்.ஏ. படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு சென்னை ஐ.ஐ.டி. அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
பொ‌றி‌யிய‌ல் படிப்பைப் போல இந்த எம்.ஏ. படிப்புக்கும் நுழைவுத் தேர்வு மூலம் மாணவ-மாணவிகள் சேர்க்கப்படுகிறார்கள். இதற்கான நுழைவுத் தேர்வு 2010ஆம் ஆண்டு மே 2ஆ‌ம் தேதி நடத்தப்பட உள்ளது. தேர்வு நேரம் 3 மணி நேரம் ஆகும். இதில் ஆப்ஜெக்டிவ் முறையிலான தேர்வுக்கு இர‌ண்டரை மணி நேரமும், கட்டுரை எழுதும் தேர்வுக்கு அரை மணி நேரமும் ஒதுக்கப்பட்டு இருக்கிறது. பிளஸ்-2 தேர்வில் குறைந்தபட்சம் 60 சதவீதம் மதிப்பெண் எடுப்பவர்கள் நுழைவுத்தேர்வு எழுத தகுதி பெறுபவர்கள். எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினர் மற்றும் உடல் ஊனமுற்றவர்கள் என்றால் 55 சதவீத மதிப்பெண் போதும்.
இந்தியாவில் உள்ள முன்னணி உயர்கல்வி நிறுவனங்களில் ஒன்றான‌ சென்னை ஐ.ஐ.டி. சேர்க்கையில் ஆதி திராவிடர்களுக்கு 15 சதவீதமும், பழங்குடியினருக்கு 7 1/2 சதவீதமும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (ஓ.பி.சி.) 27 சதவீதமும் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது.
சென்னை, கோவை, மதுரை, திருச்சி, பெங்களூர், மும்பை, ஹைதராபாத், கொச்சி, திருவனந்தபுரம், கொல்கத்தா, டெல்லி ஆகிய மையங்களில் நுழைவுத்தேர்வு நடத்தப்படும். தேர்வுக் கட்டணம் ரூ.800. பெண்கள், எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினர் மற்றும் ஊனமுற்றோருக்கு கட்டணம் ரூ.400. இதுதொடர்பாக கூடுதல் விவரங்களுக்கு 044-2257 8220
இணையதளத்தின் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க முக‌வ‌ரி
http://hsee.iitm.ac.in

0 comments:

கருத்துரையிடுக