ஞாயிறு, 27 டிசம்பர், 2009

ஆன்லைன் மூலம் ரேஷன் கார்டு! 3 மாதங்களில் கிடைக்கும்

தமிழகத்தில் விண்ணப்பித்த மூன்று மாதங்களில் புதிய ரேசன் கார்டுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. போலி ரேசன் கார்டுகளை கண்டுபிடித்து அகற்றும் பணி கடந்த சில மாதங்களாக தமிழ்நாடு முழுவதும் நடந்தது. வீடு வீடாக சென்று அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். இதில் லட்சக்கணக்கான போலி ரேசன் கார்டுகள் நீக்கப்பட்டன.
ரேசன் கடைகளில் சந்தேகத்துக்கு இடமான கார்டுகளின் எண்கள் ஒட்டப்பட்டுள்ளன. மேலும் இணைய தளம் மூலமும் ரேசன் கார்டுகள் பட்டியலில் இருக்கிறதா என்பதை அறிந்து கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது. ரேசன் கார்டு தவறான முறையில் நீக்கப்பட்டிருந்தால், ரேசன் கடையில் மனு கொடுக்கலாம். வட்ட வழங்கல் அதிகாரி மற்றும் உதவி ஆணையரிடமும் மேல் முறையீடு செய்யலாம். போலி ரேசன் கார்டுகளை நீக்கும் பணி நடந்து கொண்டிருப்பதால் புதிய ரேசன் கார்டுகள் வழங்கும் பணி தற்காலிகாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இப்போது மீண்டும் புதிய ரேசன் அட்டைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
முன்பு இரண்டு மாதங்களில் புதிய அட்டைகள் வழங்கப்பட்டன. தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு புதிய ரேசன் கார்டுகளுக்கான விண்ணப்பங்கள் பெறப்படுவதால், வரும் விண்ணப்பங்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். எனவே, அவற்றை பரிசீலித்து புதிய கார்டுகள் வழங்க அதிக அவகாசம் தேவைப்படும். எனவே, மனு கொடுத்த மூன்று மாதங்களில் புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய ரேசன் கார்டுகளுக்கு புதிய ரேசன் கார்டுகளுக்கான விண்ணப்பம் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் இணைய தளத்தில் உள்ளது. என்றாலும், ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்கும் வசதி இல்லை.
போலி ரேசன் கார்டுகளை நீக்கும் பணி இன்னும் மூன்று மாதங்களுக்குள் முடிவடைந்து விடும். அதன் பிறகு “ஆன்-லைன்” மூலம் புதிய ரேசன்கார்டுகளுக்கு விண்ணப்பிக்கும் வசதி அறிமுகம் செய்யப்படும்” என்று உணவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

0 comments:

கருத்துரையிடுக