இந்நிலையில், இந்திய பொருளாதார வளர்ச்சி குறித்து லண்டனைச் சேர்ந்த லெகடம் இன்ஸ்டிடியூட் ஒரு ஆய்வு நடத்தியது. இந்திய நிறுவனங்களின் உயர் அதிகாரிகள், தொழில் முனைவோர், தொழில் தொடங்க விரும்புவோர் உள்ளிட்ட 2,400 இந்தியர்களிடம் இதுகுறித்து கருத்து கேட்கப்பட்டது.
அதன் விவரம்: இந்திய பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருவதாக ஆய்வில் பங்கேற்றவர்கள் தெரிவித்துள்ளனர். இதன்மூலம், பொருளாதார அடிப்படையில் வரும் 2030ம் ஆண்டில் இந்தியா வல்லரசு நாடாகும் என ஆய்வில் பங்கேற்ற 53 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.
தொழில் துறையைச் சேர்ந்தவர்களிடம் இந்திய பொருளாதார வளர்ச்சி மீது அதிக நம்பிக்கை இருப்பதை ஆய்வில் உணர முடிந்தது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் நாட்டின் வளர்ச்சி வீதம் பழைய நிலைக்கு திரும்பிவிடும் என ஆய்வில் பங்கேற்ற 10ல் 9 பேர் தெரிவித்துள்ளனர். 5 பேரில் ஒருவர் மட்டுமே சர்வதேச நிதி நெருக்கடியால் இந்திய வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதன்மூலம், அடுத்த 20 ஆண்டுகளில் அமெரிக்கா, ஜப்பான், ஜெர்மனி, பிரான்ஸ், பிரிட்டன் ஆகிய வளர்ந்த நாடுகள் மற்றும் இந்தியாவுக்கு இணையாக வளர்ந்து வரும் சீனா ஆகியவற்றை பின்னுக்குத் தள்ளி உலகின் நம்பர் ஒன் பொருளாதார சக்தியாக இந்தியா உருவெடுக்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
0 comments:
கருத்துரையிடுக