சனி, 19 டிசம்பர், 2009

40% அலுவலக இடங்கள் துபாயில் காலியாக உள்ளன



பொருளாதர நெருக்கடிக்கு பின் துபாயில் உள்ள அலுவலக கட்டிடங்களில் சுமார் 40 சதவிகிதம் இடங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்படாமல் காலியாக உள்ளன என்று வணிக முதலீட்டு நிறுவனம் நைட் பிராங் தெரிவித்துள்ளது.
துபாயில் மொத்தம் சுமார் 10 இலட்சம் சதுர மீட்டர் அளவு இடங்கள் காலியாக உள்ளன என்று சொன்ன அந்நிறுவனம் அபுதாபியில் வெறும் 6 சதவிகித அலுவலக இடங்களே காலியாக உள்ளன என்றும் தெரிவித்தது. மேலும் தற்போது சிறிய அலுவலங்களுக்கே தேவை உள்ளதாகவும் தெரிவித்தது.
துபாயில் காலியாக உள்ள அலுவலக இடங்கள் நிரப்பப்பட வேண்டுமானால் குறைந்தது 1,50,000 அலுவலக பணிகளும் அத்துடன் தொடர்புடைய பணிகளும் உருவாக்கப்பட வேண்டும் என்று துபாயை தளமாக கொண்டு இயங்கும் முதலீட்டு வங்கியான நோமூரா தெரிவித்துள்ளது.

0 comments:

கருத்துரையிடுக