வெள்ளி, 4 டிசம்பர், 2009

லிபரான் கமிஷன் அறிக்கை மீது விவாதம் நடத்தப்படும் தேதி மாற்றம்.


பாபர் மசூதி இடிப்பு பற்றி விசாரித்த லிபரான் கமிஷன் அறிக்கை மீது பாராளுமன்றத்தில் 9 மற்றும் 10-ந் தேதிகளில் விவாதம் நடைபெறும் என்று நேற்றுமுன்தினம் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த விவாதத்தை, 2 நாட்கள் முன்கூட்டியே, 7 மற்றும் 8-ந் தேதிகளில் நடத்த நேற்று முடிவு செய்யப்பட்டது. டெல்லி மேல்-சபையில் 14-ந் தேதி விவாதம் நடைபெறும் என்று தெரிகிறது.
லிபரான் கமிஷன் அறிக்கையின் இந்தி பிரதியை இரு அவைகளிலும் மத்திய உள்துறை மந்திரி ப.சிதம்பரம் நேற்று சமர்ப்பித்தார். இரு அவைகளுக்கும் தலா 75 பிரதிகள் வழங்கப்பட்டன.

0 comments:

கருத்துரையிடுக