இந்தியாவில் பணியாற்றும் வெளிநாட்டு ஊழியர்கள் இனி தாயகத்துக்கு தங்கள் முழுச் சம்பளத்தையும் அனுப்ப ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது.நம்நாட்டின் சிவில் விமான போக்குவரத்து, தொலைத் தொடர்பு, கட்டமைப்பு உட்பட பல முக்கிய துறைகளில் வெளிநாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக் கான ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
அவர்களது வருமானம், அன்னிய செலாவணி நிர்வாக சட்டத்தின் (ஃபெமா) கீழ் கண்காணிக்கப்படுகிறது. அதன்படி, வெளிநாட்டு ஊழியர்கள் இந்தியாவில் சம்பாதிக்கும் தொகையில் 75 சதவீதம் மட்டுமே தாயகத்துக்கு அனுப்பலாம் என்ற விதிமுறை இருந்தது.
இதை ரிசர்வ் வங்கி இப்போது மாற்றி அறிவித்துள்ளது. அதன்படி, இனி அவர்கள் சம்பளம் முழுவதையும் தாயகத்துக்கு அனுப்பலாம். இதன்மூலம், ஆயிரக்கணக்கான வெளிநாட்டு ஊழியர்கள் பயன்பெறுவர். மேலும், ஊழியர்கள் சம்பளத்தை நிர்ணயிப்பதில் சட்டச் சிக்கல்களின்றி நிறுவனங்கள் விருப்பப்படி முடிவெடுக்க முடியும்.
வெளிநாடுகளைச் சேர்ந்த ஊழியர்கள் மட்டுமின்றி, அன்னிய நிறுவன ஊழியராக வெளிநாட்டில் பணியாற்றும் இந்தியர்கள், தற்காலிக இடமாற்றமாக இந்தியாவில் பணிபுரிந்தாலும் இந்த சலுகையைப் பெற முடியும்.
இதுபற்றி எர்ன்ஸ்ட் யங் நிறுவனத்தின் அமிதாப் சிங் கூறுகையில், ÔÔரிசர்வ் வங்கியின் முடிவு வரவேற்கத்தக்கது. இதனால், வெளிநாடுகளைச் சேர்ந்த திறமையான ஊழியர்கள் அதிகளவில் இந்தியாவில் பணியாற்ற வருவார்கள்ÕÕ என்றார்.
0 comments:
கருத்துரையிடுக