freepalastine
வியாழன், 17 டிசம்பர், 2009
ஐரோப்பிய யூனியனின் அறிக்கை பலஸ்தீன் மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கவில்லை
ஹமாஸ் பேச்சாளர் கலாநிதி ஸமீ அபூ ஸுஹ்ரி:
காஸா – பலஸ்தீனுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான பிரச்சினையைத் தீர்ப்பதற்கான ஓர் அரசியல் தீர்வு, ஆக்கிரமிக்கப்பட்ட ஜெரூசலத்தின் எதிர்காலம் என்பன தொடர்பில் ஐரோப்பிய யூனியன் வெளியிட்டுள்ள அறிக்கை பலஸ்தீன் மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கவில்லை என்று ஹமாஸ் தெரிவித்துள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை (08.12.2009) இரவு ஹமாஸ் பேச்சாளர் கலாநிதி ஸமீ அபூ ஸுஹ்ரி பலஸ்தீன் தகவல் மையத்துடனான (PIC) சந்திப்பின்போது, பலஸ்தீன் பிரச்சினை தொடர்பில் நடுநிலையான சர்வதேச நிலைப்பாட்டை மேற்கொள்வதில் ஐரோப்பிய யூனியன் முக்கிய பங்குவகிக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.
பலஸ்தீன் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கு ஆதரவான எத்தகைய முன்னெடுப்பையும் ஹமாஸ் வரவேற்கும். அதேவேளை, 1967 ஆண்டுக்குரிய எல்லைகளுடன் பலஸ்தீன் தேசம் ஸ்தாபிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ளும். ஆனால், பலஸ்தீன் நிலப்பரப்பிலிருந்து ஆக்கிரமிக்கப்பட்ட எந்தவோர் இடத்திலும் இஸ்ரேல் நிலைகொள்வதை அது அங்கீகரிக்கப் போவதில்லை என்று ஸமீ அபூ ஸுஹ்ரி விளக்கமளித்தார்.
கடந்த வியாழக்கிழமை இருநாடுகளுக்கும் இடையிலான பிரச்சினையை ‘அமைதியாகத் தீர்க்கும்’ வகையில் இஸ்ரேல் – எதிர்கால பலஸ்தீன் ஆகிய இருநாடுகளுக்கும் ஜெரூசலம் தலைநகராக இருக்கும் என்று ஐரோப்பிய யூனியனின் வெளிநாட்டு அமைச்சர்கள் உடன்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நன்றி: PIC
freepalastine
freepalastine

0 comments:
கருத்துரையிடுக