
இது தொடர்பாக கலெக்டர் ராஜேந்திர ரத்னூ வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது: குமரி மாவட்டத்தில் 2010ம் ஆண்டு பொங்கல் திருநாளை முன்னிட்டு 1.1.2010 முதல் 10.1.2010 வரை மாவட்டத்தில் உள்ள 81 வருவாய் கிராமங்களிலும் இலவச வேட்டி சேலைகள் விநியோகம் செய்யப்படுகிறது. வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழ்பவர்கள் இலவச வேட்டி சேலை பெற தகுதியுடையவர்கள். இலவச வேட்டி வழங் கும் வருவாய் கிராம அலுவலகத்தில் இலவச வேட்டி, சேலை வழங்கப்படும் விபரங்கள் குறித்து தகவல் பலகையில் பொதுமக்கள் பார்வைக்கு விளம்பரப்படுத்தப்பட உள்ளது. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த இலவச வேட்டி சேலை வழங்கப்படும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
கருத்துரையிடுக